உதயநிதி ஸ்டாலின் நடித்த கழகத் தலைவன் படம் ஆரம்பகட்ட பணியில் நடந்து கொண்டிருந்தபோது, தற்காலிகமாக அந்த படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெறாமல் தாமதம் ஆகி கொண்டிருந்தது காலகட்டம் அது. அப்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்பு இயக்குனர் மகிழ் திருமேனியை நேரில் அழைத்து சேர்ந்து படம் பண்ணுவதற்காக கதைகள் கேட்டு உள்ளார் விஜய்.
அப்போது இயக்குனர் மகிழ் திருமேனி மூன்று கதைகளை விஜய்யிடம் தெரிவித்துள்ளார். அந்த மூன்று கதையும் விஜய்க்கு பிடித்து போக, இதில் எந்த கதை உங்களுக்கு பிடித்துள்ளது என மகிழ் திருமேனி கேட்டுள்ளார். அதற்கு விஜய் இந்த மூன்று கதையுமே எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் இந்த மூன்று கதையின் ஏதாவது ஒரு கதையை நீங்களே தேர்வு செய்து அடுத்தகட்ட பணியை தொடங்குகள் என விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் வேறு ஏதாவது படத்தில் கமிடாகி உள்ளீர்களா என்றும் விஜய் கேட்டுள்ளார். அதற்கு மகிழ் திருமேனி தான் ஏற்கனவே கழகத் தலைவன் படத்தில் கமிட்டாகி, பின் அந்த படம் தாமதமாகி கொண்டிருப்பதை விஜய்யிடம். தெரிவிக்காமல் இல்ல சார், வேற ஏதும் படத்தில் கமிட்டாகவில்லை என தெரிவித்துள்ளார். அப்படியானால் நீங்க சொன்ன மூன்று கதைகளில், உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதில் ஒரு கதையை எடுத்து அடுத்த கட்ட வேலையை தொடங்குக என விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி.நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்ன விவரத்தையும், மேலும் அவர் ஓகே சொல்லி உடனே அடுத்தகட்ட பணியை தொடங்க சொன்னதையும் தெரிவித்து, விஜய் படத்தை இயக்கம் வாய்ப்பு வந்துள்ளது, அந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன், அதன் பின்பு கழக தலைவன் படத்தை தொடங்கலாம் என உதயநிதியிடம் கேட்டுள்ளார் மகிழ் திருமேனி.
ஆனால் அதற்கு உதயநிதி ஸ்டாலின். கழக தலைவன் படத்தை டேக் ஓவர் செய்தாச்சு. அதனால கழக தலைவன் படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களை இயக்க செல்லுங்கள், என விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்கம் வாய்ப்புக்கு முட்டு கட்டை போட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதன் பின்பு மீண்டும் விஜய்யை சந்தித்து உதயநிதி படத்தில் ஏற்கனவே கமிட்டாகி இருந்து விவரத்தை தெரிவித்த மகிழ் திருமணி.
அந்த படம் தொடங்கப்படாமல் தாமதமாகி கொண்டிருந்தது, ஆனால் தற்பொழுது டேக் ஓவராகி விட்டது, அதனால் உங்கள் படத்தை தன்னால் தற்பொழுது இயக்க முடியாது, கழக தலைவன் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என விஜய்யை சந்தித்து மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். அப்போது ஒரு பெரிய நடிகர் படம் கிடைத்து விட்டது என ஏற்கனவே கமிட்டாகி இருந்த படத்தை தூக்கி எறிந்துவிட்டு வராமல் மகிழ் திருமேனி நடந்து கொண்ட விதம் விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளது.
உடனே ஓகே , நீங்கள் ஏற்கனவே கமிட்டாகி இருந்த படத்தில் நடித்துவிட்டு வாங்க, மீண்டும் வாய்ப்பு இருந்தால் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என மகிழ் திருமேனியிடம் விஜய் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில் விஜய் – மகிழ் திருமேனி இணையும் படத்திற்கு உதயநிதி போட்ட முட்டு கட்டையால் விஜய் – மகிழ் திருமேனி இருவரும் இணைந்து படம் பண்ணுவதர்க்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாய் உள்ள மகிழ் திருமேனி. ஏற்கனவே விஜயிடம் தெரிவித்த மூன்று கதைகளில் ஒரு கதையைத்தான் அஜித்திடம் தெரிவித்து இருப்பார் என்றும். ஆனால் விஜய்க்காக தயார் செய்த கதைகளில், அஜித்துக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை செய்திருப்பார் மகிழ் திருமேனி என சினிமா துறையை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.