தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு படத்திற்கு சுமார் 130 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்பொழுது பொங்கலன்று வெளியாக இருக்கும் வாரிசு படத்தில், விஜய் அவருடைய சொந்த குரலில் பாடிய ரஞ்சிதமே… ரஞ்சிதமே.. பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்களை தன் வசப்படுத்திக் கொண்ட நடிகர் விஜய் பாராட்டு பெறுவதற்காக சில உத்தரவாதங்களை கொடுத்து, பின்பு வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவது போல் அது வேற வாய், இது நாற வாய் என்கின்ற வசனத்திற்கு ஏற்ப விஜய் அந்தர்பல்டி அடித்த சம்பவம் அவருக்கு மிகப்பெரிய தலைகுனிவை தற்பொழுது ஏற்படுத்தி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் நடிகர் விஜய்.
கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி சினிமாவில் நடிகர்கள் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும், நடிகர் புகைப்பிடிப்பதால் வரை பின்பற்றும் ரசிகர்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை தெரிவித்துருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி, இனி தன்னுடைய படத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்தார்.
மேலும் அன்புமணியின் கோரிக்கை ஏற்புடையது என்பதால், தன்னை பின்பற்றி தன்னுடைய ரசிகர்கள் தவறான பாதைக்கு சென்று விட கூடாது என்பதற்காக தான் எடுத்து முடிவில் தடம் மாறாமல் தற்பொழுது வரை சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில், இதுவரை ரஜினி அவர் நடிக்கும் படத்தில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
இதே போன்று 2007 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தான் இனி நடிக்கும் படங்களில் புகை பிடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் அப்போது மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் மற்றும் சமூக ஆர்வலர்களும் நடிகர் விஜயை மிகப்பெரிய அளவில் பாராட்டினார்கள். தமிழ் சமூகத்தில் நடிகர் விஜய்க்கு மிகப் பெரிய பாராட்டையும், நற்பெயரையும் இந்த சம்பவம் பெற்று கொடுத்தது. ஆனால் அடுத்த சில வருடங்களில் விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தொடங்கினார்.
மேலும் விஜய் நடிக்கும் படங்களின் விளம்பர போஸ்டர்களில் அவர் புகை பிடிப்பது போன்ற அந்தப் புகைப்படம் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று தமிழக இளைஞர்களை, குறிப்பாக அவருடைய ரசிகர்களையும் புகை பிடிப்பதை ஊக்கப்படுத்துவது போன்று அமைந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் சமூக அக்கறை இல்லாமல் புகைபிடிப்பது போன்று விஜய் நடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம்.
ஆனால் மக்கள் மத்தியில் பாராட்டையும் நற்பெயரை பெறவேண்டும் என்பதற்காக இனி புகை பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று அறிவிப்பை வெளியிட்டு, கொடுத்த வாக்கை தவறிய நடிகர் விஜய் தற்பொழுது சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்களில் புகைபிடிப்பது போன்று நடித்து வருகிறார். விரைவில் வெளியாகும் வாரிசு படத்திலும் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் அஜித் போன்ற நடிகர்கள் தற்பொழுது வரை புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தாலும், அவர்கள் இதற்கு முன்பு நான் இனிமேல் புகைபிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்கவில்லை. அதுபோன்று விஜய் எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும், ஆனால் இதற்கு முன்பு யோக்கியன் வேஷம் போட்டுவிட்டு தற்பொழுது அவர் அந்தர்பல்டி அடித்தன் மூலம் அவருடைய அயோக்கியத்தனம் வெளிப்பட்டுள்ளது என்கிற கடுமையான விமர்சனத்தை ஏற்று தமிழக மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது