தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, ரஜினிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகின்றவர் நடிகர் விஜய். சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் போன்று, சினிமாவில் சம்பாரித்து சினிமாவில் முதலீடு செய்து தான் சம்பாரித்த பணத்தை இலக்காமல். நடிகர் ரஜினியை பின்பற்றி வருமானம் வரும் வகையில் வெளியில் முதலீடு செய்து வருகின்றவர் நடிகர் விஜய்.
அந்த வகையில் அவருடைய மனைவி லண்டனை சேர்ந்த இலங்கை தமிழர் என்பதால், அவர் மூலமாக, லண்டன் போன்ற வெளிநாடுகளில் பல கோடி முதலீடு செய்துள்ளார் விஜய் என கூறப்படுகிறது. அதே போன்று சென்னையில் திருமணம் மண்டபம் போன்று இன்னும் அசையா சொத்துக்கள் பல வாங்கி குவித்துள்ளார் விஜய்.
இதில், சென்னை சாலிகிராமத்தில் விஜய் அவருடைய அம்மா சோபா பெயரில் சோபா கல்யாண மண்டபம் அவருக்கு சொந்தமாக உள்ளது. அதேபோன்று சென்னை பேரூரில் மனைவி சங்கீதா பேரில் சங்கீதா திருமண மண்டபமும் உண்டு. இதில் சாலிகிராமத்தில் உள்ள சோபா கல்யாண மண்டபத்தை சினிமா தயாரிப்பாளர் லலித் லலித் குமாரிடம் மாதத்திற்கு 7 விதம் சுமார் 15 வருடத்திற்கு லீசுக்கு விட்டிருந்தார் நடிகர் விஜய்.
இந்த நிலையில் சோபா கல்யாண மண்டபத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் மாதம் 10 லட்சம் ரூபாய் வாடகைக்கு கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஷோபா கல்யாண மண்டபத்தை 15 வருடம் லீசுக்கு எடுத்த லலித் ஒப்பந்தம் படி, தற்பொழுது ஏழு வருடங்கள் மட்டும் முடிந்த நிலையில், அந்தப் பழைய ஒப்பந்தத்தை விஜய் ரத்து விட்டார் என கூறப்படுகிறது.
மேலும், புதியதாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மாதம் 10 லட்சம் ரூபாய் வாடகைக்கு சோபா திருமண மண்டபத்தை சூப்பர் மார்க்கெட் அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோன்று பேரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபத்தையும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சூப்பர் மார்க்கெட் அமைப்பதற்காக வாடகைக்கு விட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக, ஏற்கனவே ஒப்பந்தம் செய்தவரிடம் நாணயமாக நடந்து நடந்து கொள்ளாமல், ஒப்பந்தத்தின் படி இன்னும் 7 வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கு முன்பே அந்த ஒப்பந்தத்தை ரத்து செத்துவிட்டு, விஜய் அந்த பல்டி அடித்துள்ளது அவரின் நாணயத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.