நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, மேலும் இந்த படத்தில் இருந்து தான் நடிகர் அஜித்குமார் தல என்று அடைமொழியுடன் சினிமா ரசிகர்கள் அழைக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், இந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.
மிக பெரிய உச்சத்தில் இருந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படம் மூலம் விஜய்யுடன் முதல் முதலில் இணைந்தார், நடிகர் விஜய் நடிப்பில் முதல் முதலில் 100 கோடி வசூல் சாதனை படைத்த படம் துப்பாக்கி என்பது குறிப்பிடதக்கது, துப்பாக்கி படம் அணைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம். ரஜினிகாந்துக்கு எப்படி பாட்ஷா படம் பெயரும் புகழும் வாங்கி தந்தது, அதே போன்று துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது.
இதன் பின்பு மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டனியில் கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார் முருகதாஸ். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வந்த தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஏற்கனவே தர்பார் படம் முடிந்த பின்பு, அடுத்து விஜய் நடிப்பில் ஒரு படம் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது, ஆனால், தர்பார் படத்துக்கு பின்பு முருகதாஸை கண்டுகொள்ளவில்லை விஜய்.
விஜய்யை பல முறை சந்தித்து அடுத்த படம் குறித்து பேச முயற்சி செய்த போதெல்லாம் சந்திக்க கூட அனுமதியில்லாமல் தவித்து வந்தார் முருகதாஸ், தன்னுடைய இயக்கத்தில் மிக பெரிய வெற்றி அடைந்த விஜய், தன்னை கண்டுகொள்ளாமல் கைவிட்ட நிலையில், வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்கலாம் என முடிவு செய்த முருகதாஸ், ஆனால், விஜய், மகேஷ் பாபு, அமீர்கான், ரஜினிகாந்த் , அஜித் என டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவிட்டு,
அதற்கு அடுத்தபடியாக உள்ள நடிங்கரை வைத்து படம் இயக்கினால், தனக்கு மரியாதை இருக்காது என டாப் ஹீரோக்களை வைத்து மட்டும் தான் படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளார் முருகதாஸ், இந்நிலையில் நடிகர் அஜித்தை அப்ரோச் செய்ய முயற்சி செய்துள்ள முருகதாஸ் அதற்கான கதையையும் தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து முருகதாஸ் நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட தகவல் அஜித் கணவத்துக்கு சென்றுள்ளது.
மேலும் முருகதாஸின் இன்றைய பரிதாப நிலை குறித்து அஜித்திடம் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனே முருகதாஸை நேரில் அழைத்துள்ளார் அஜித், பின்பு கதை கேட்டவர் விரைவில் பதில் சொல்கிறேன் என தெரிவித்த அஜித், தற்பொழுது முருகதாஸ் கதையை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அஜித் AK 63 படத்தை இயக்கும் வாய்ப்பை முருகதாஸுக்கு வழங்கி சினிமாவில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் அஜித் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.