பேசாம போயா… நான் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டது போதாதா.? டென்ஷன் ஆன விஜய்..எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், இவர்கள் கூட்டணியில் முதல் முதலில் வெளியான படம் துப்பாக்கி, இந்த படம் மிக பெரி ஹிட் கொடுத்தது, அதாவது, நடிகர் விஜய் சினிமா பயணத்தில், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி போன்ற படங்கள் எப்படி ஒரு மயில் கல்லாக இருந்ததோ, அதே போன்று துப்பாக்கி படம் விஜய் சினிமா பயணத்தில் முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்த படம்.

இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் இணைத்தார் நடிகர் விஜய், விவசாயம் சார்ந்த கதை என்பதால், மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற கத்தி படத்தில் நடிகர் விஜய்க்கு தமிழ் சமூகம் பாராட்டை தெரிவித்தது, இதனை தொடர்ந்து எப்படி இயக்குனர் தரணி, நடிகர் விஜய் கூட்டணி என ஒரு காலத்தில் கூறப்பட்டது, அதே போன்று முருகதாஸ் , விஜய் கூட்டணி வெற்றி கூட்டணியாக சினிமாவில் பேசப்பட்டது.

இந்நிலையில் முருகதாஸ் மீது மிகுந்த நம்பிக்கையில் மீண்டும் இணைந்து படம் நடிக்க விஜய் விரும்பியதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவான படம் தான் சர்கார், ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் மிக பெரிய சிக்கலில் சிக்கியது, தன்னுடைய கதையை திருடி முருகதாஸ் சர்கார் படம் எடுத்துள்ளதாக வருண் என்ற ராஜேந்திரன் நீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தார்.

இந்த பிரச்சனையை திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் இயக்குனர் பாக்யராஜ் விசாரித்து, முருகதாஸ் கதையை திருடி தான் சர்கார் படத்தை எடுத்துள்ளார் என உறுதி செய்யப்பட்ட பின்பு, அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு திருட்டு கதையில் நடித்துள்ளார் என மிக பெரிய அவமானத்தை பெற்று தந்தது, மேலும் படம் வெளியான பின்பு படத்தில் தேவையின்றி அதிமுக அரசை சீண்டும் வகையில் காட்சிகள் இடப்பெற்று பெரும் சர்ச்சையில் சிக்கியது சர்கார்.

இதனால் நடிகர் விஜய் கடும் நெருக்கடிக்கு உள்ளனர், மேலும் இது போன்ற காட்சிகள் மக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது குறிப்பிடதக்கது, இதனை தொடர்ந்து முருகதாஸ் தன்னை மிக பெரிய சிக்கலில் சிக்க வைத்து விட்டார் என வருத்தத்தில் இருந்தார் விஜய். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க கதை ஒன்றை தயார் செய்துவிட்டு நடிகர் விஜய்யை சந்திக்க அனுமதி கேட்டு தகவல் அனுப்பியுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

இந்த தகவல் நடிகர் விஜய் கவனத்துக்கு சென்டர் உடன் டென்ஷனான விஜய், ஏன் அவரால் சர்கார் படத்தில் நான் பட்ட அசிங்கம், அவமானம் போதாதா என கோபத்துடன் பேசியவர், எப்ப சந்திக்கலாம் என முருகதாஸுக்கு தகவல் சொல்லி அனுப்புறேன் என தட்டி கழிப்பது போன்று பதில் சொல்லி அனுப்பியுள்ளளார் நடிகர் விஜய் என கூறப்படும் நிலையில், மீண்டும் முருகதாஸ் , விஜய் கூட்டணியில் படம் உருவாக சாத்தியம் இல்லை என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது கூறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!