நடிகர் விஜய் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நடிகர் விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி தொடங்கினார். இந்நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவர் பேசியிருக்கும் வீடியோவில், “இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன்.
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதன்படி, உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், இணைய பயனாளர்களுக்கென தனித்தனியாக ‘க்யூஆர்’ குறியீடு அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்குவதை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காணொலி மூலம் விஜய் தொடங்கி வைத்தார்.
அப்போது, க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி செயலி மூலம் விஜய், தனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்தார். உறுப்பினர் அட்டையை பெறுவதற்கு தமிழகம் உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஒரே நேரத்தில் க்யூஆர் குறியீடைப் பயன்படுத்தியதால் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி, அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயலிக்கான தளங்கள் அனைத்தும் முடங்கின.
பின்னர் சில மணி நேரம் கழித்து அனைத்து தளங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விஜய் என்ன தான் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்கள் சேர்க்கை என்று செயல்பட்டாலும் அவர் இன்னும் கள அரசியல் செய்யவே இல்லை.. கட்சி பெயரை லெட்டர் பேரில் தொடங்கினர். தற்பொழுது உறுப்பினர் சேர்க்கையை ஆப் தொடங்கியுள்ளார்..
இப்படி வீட்டிலே அமர்ந்து கோட்னு விஜய் டிஜிட்டல் முறையில் அனைத்தும் செய்து வருகிறார். ஆனால் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு, மக்கள் கூட்டம் என்று எதிலும் அவர் கலந்துக் கொள்ள வில்லை.
மேலும் ஏதேனும் உதவி தேவையெனில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தான் அங்கு சென்று உதவுகின்றனர். விஜய் பெயரைப் பயன்படுத்தி அனைவரும் களம் காணும் சூழலில் விஜய் இன்னும் முழு பிரவேசித்துடன் அரசியலில் இறங்காதது பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த வகையில், அரசியலுக்கு வருவது என முடிவு செய்து விட்ட விஜய், லெட்டர் பேடில் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு சினிமாவில் பேசியாக இருக்கும் விஜய், படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் தற்பொழுது உறுப்பினர் சேர்க்கை ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் என்ன கூத்து என்றால் ஒருவர் இரண்டு முறை மூன்று முறை என உறுப்பினர் என் வாங்கலாமாம்,
அந்த வகையில் ஒருவர் பத்து முறை கூட உறுப்பினராக ரெஜிஸ்டர் செய்து விட்டு, 8கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்கத்தில் 10 கோடி உறுப்பினர்கள் விஜய் அரசியல் கட்சி உறுப்பினராக இணைந்துள்ளார்கள் என விஜய் படம் 1000 கோடி வசூல் 2000 கோடி வசூல் என இதற்கு முன்பு உருட்டியது போன்று என விஜய் ரசிகர்கள் உருட்டலாம் என எதிர்பார்க்க படுகிறது.அந்த வகையில் அரசியல் கட்சியை தொடங்கிய வீட்டிலே உட்கார்ந்து கொண்டு வாயிலே வடை சுடுவதை விஜய் நிறுத்திவிட்டு கள அரசியலுக்கு வர வேண்டும், அப்போது தான் அவருக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியும் என பலரும் விஜய்க்கு அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.