தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகின்றவர் நடிகர் விஜய் சேதுபதி, பொது மேடைகளில் பேசுவதில் தொடங்கி விஜய் சேதுபதி சினிமாவில் நடிப்பது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வர கூடியவர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த நிலையில், இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கடும் எதிப்பு தெரிவித்தனர் இதனை தொடந்து அந்த திரைப்படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்த்துவிட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பெண்களை உள்ளே செல்ல கடும் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு பெண்கள் உள்ளே செல்வதை ஆதரிக்கும் வகையில் அப்போது தெரிவித்த விஜய் சேதுபதி, ’ஒரு ஆணாக வாழ்க்கை வாழ்வது ரொம்ப சுலபம். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாத விலக்கினால் வழி அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? உண்மையில் சொல்லப் போனால் அது மிகவும் புனிதமானது. கேரள சபரிமலை விவகாரத்தில் நான் முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறேன் என தெரிவித்து அப்போது சர்ச்சையில் சிக்கினார் விஜய் சேதுபதி.
மேலும் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது மூடப்படுகிறது?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்ட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார்.
அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கிண்டலடிக்கும் விதத்தில் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சால் கடும் பேச்சு எதிராக சிலர் போராட்டமே நடத்திய சம்பவமும் உண்டு. இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் நடந்தது.
இப்படி சர்ச்சைக்கு பெயர் போன விஜய் சேதுபதி பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது தேர்தல் நேரத்தில் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதில், ‘இன்னொரு வைரஸ் இருக்கு. அது என்னன்னா சாமிக்காக சண்டை போட்டுகிறாங்க. ஏன்னு எனக்கு தெரியல. நாம எல்லாரும் ஒன்னு புரிஞ்சிக்கணும். சாமி பல கோடி வருஷமா இங்க இருக்குது.
ஆனால் சாமி இன்னும் சாமியை காப்பாத்துற மகா மனுஷனை படைக்கல. சாமி தன்னை காப்பாத்திக்கும். சாமியை காப்பாத்துறன்னு சொல்ற எந்த கூட்டத்தோடும் பழகாதீங்க. அது ரொம்ப முக்கியம்.சாமியை ஒரு சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. அவர்கள் சொல்வது எல்லாம் பொய். யாராவது எதாவது பேசினால், ‘என்னோட மதத்துல என்ன சொல்கிறது’ என்பதை பதிலாக சொல்லாமல், மனிதத்தையும், மனித நேயத்தையும் சொல்லி கொடுங்க என பேசியுள்ள விஜய் சேதுபதி.
மனிதனை மதிக்க வேண்டும் என சொல்லுங்க. கடவுள் மேல இருக்காரு. மனிதன் தான் பூமியில் இருக்கிறான். மனிதனை மனிதனால் மட்டும் தான் காப்பாற்ற முடியும். இது மனிதர்கள் சகோதரத்துவத்துடன் சந்தோசமாக அன்பை பரிமாறிக்கொண்டு வாழும் இடம் இது. மதத்தை சொல்லி கடவுளையே பிரிக்கிறாங்க. கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே மதம் அவசியம் இல்லாதது என கடவுள் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ ஒன்றும், மற்றொன்று அரசியல் குறித்து பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “தேர்தல் வரப்போகிறது நீங்கள் வாக்களிக்கும் பொழுது தயவு செய்து நன்கு யோசித்து வாக்களியுங்கள்”. நமக்கென்று ஒரு பிரச்சனை வருகிறது, அதை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறுபவனோடு இணைந்து போரிடுங்கள். ஆனால் நம் சாதிக்கோ, நம் மதத்திற்கோ பிரச்சனை ஏற்படுகிறது வாருங்கள் அதற்காக போரிடுவோம் என்று கூறுபவர்களோடு இணைய வேண்டாம்” என இதற்கு முன்பு விஜய் சேதுபதி பேசிய வீடியோ ஓன்று தற்பொழுது தேர்தல் நேரத்தில் வைரலாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.