நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள வாரிசு திரைப்படம் கடும் போராட்டத்திற்கு பின்பு திரைக்கு வந்தது. விஜய் தன்னுடைய வாரிசு படத்தை பொங்கல் அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்த பின்பு, அதே தேதியில் அஜித் தன்னுடைய படத்தையும் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது. இதே போன்று வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெறுவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சற்று இறங்கி வந்தாலும் கூட நடிகர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலினுக்கும் முன்பு இருந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்து எந்த ஒரு காரணத்திற்காகவும் என்னுடைய படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிக்கு கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார் நடிகர் விஜய்.
இதனை தொடர்ந்து வாரிசு படம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது, போதிய திரையரங்கு கிடைக்காமல் இப்படி தவித்து வந்த வாரிசு திரைப்படம், துணிவு படத்துடன் நேரடியாக மோதுமா.? அல்லது தேதி தள்ளி வைக்கப்படுமா.? என்கிற செய்திகள் கூட வெளியானது. இந்த நிலையில் வாரிசுபடத்தின் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் லலித் ஒரு கட்டத்தில் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்யிடம் சரண்டர் ஆகும் வகையில் குறிப்பிட்ட சில ஏரியாக்களை ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்க்கு வாரிசு படத்தை விற்பனை செய்தார்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் துணிவு படத்திற்கு சமமான திரையரங்கு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயின் பிடிவாதத்தினால் பல கட்ட பிரச்சனைகளை சந்தித்து திரைக்கு வந்தது வாரிசு திரைப்படம், இந்நிலையில் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு விஜயின் அடுத்த படத்தை இயக்க இருப்பது இயக்குனர் அட்லி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
விஜய் – அட்லீ இணையும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அட்லி – விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில் விஜய் எப்படி மீண்டும் உதயநிதி ஸ்டாலின் கம்பெனியிக்கு படம் கொடுப்பார் என்று பல தர பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
அதற்கு சாதுரியமாக காய் நகர்த்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்,விஜய் – அட்லி கூட்டணியில் ஏற்கனவே வெளியாகிய மெர்சல் படத்தை தயாரித்த தேனான்டாம்பல் பிலிம்ஸ் முரளிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக அட்லி மற்றும் விஜய் இருவருமே அப்போது மீண்டும் அதே நிறுவனத்திற்கு கால் சீட் தருவதாக உறுதியளித்து, தற்போது வரை கால் சீட் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தேனாண்டாம் முரளி பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது செயல்பட தொடங்கியுள்ளார். அதாவது அட்லி மற்றும் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டையும் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் தேனாண்டாம்மாஸ் பிலிம்ஸ் பின்னணியில் இருந்து செலவு செய்ய தயாராக இருக்கிறது. அதன் அடிப்படையில் விரைவில் அட்லியை தயாரிப்பாளர் முரளி சந்திக்க இருப்பதால், அட்லி சற்று நழுவலாக பதில் சொன்னாலும் கூட, ஏற்கனவே மெர்சல் படத்தில் தாங்கள் பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்கு ஒரு படம் கால் சீட்டு நீங்கள் கொடுத்து ஆக வேண்டும் என முரளி கேட்ப்பார்.
மேலும் விஜய் நேரடியாக ரெட் ஜெயன்ஸ் மூவிஸ் தயாரிப்பில் நடித்தால் அவருக்கு சில பிரஸ்டீஜ் பிராப்ளம் வரும் என்பதால் தேனாண்டாம்பாள் பிலிம்ஸ்ஸை உதயநிதி முன்னிறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தை விஜய் புறக்கணிக்கும் பட்சத்தில், அடுத்தடுத்து விஜய் படங்கள் வெளியாகும் சமயங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் மிகப்பெரிய படங்களை அதே தேதியில் வெளியிட்டு மிகப்பெரிய போட்டியை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன் மூவிஸ் கொடுக்கும் என்று கூறப்படுவதால், வேறு வழி இன்றி முரளி தயாரிப்பில் கால் சீட் கொடுத்து தனக்கும் உதயநிதிக்கும் இதற்கு முன்பு இருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் விஜய் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.