யோக்கியன் வேஷம் போடும் விஜய்… விஜயகாந்த் குடும்பத்தின் மீது பழியை போட்டு நல்லவர் வேஷம் போடும் விஜய்…

0
Follow on Google News

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ச உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளியோரின் பசியாற்றியும், உதவி என்று நாடி வருபவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் சிறந்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார் என்பது அவர் இறந்த பின்பு அவரால் உதவியை பெற்றவர்கள் கதறி அழும் காட்சிகளே சாட்சி.

விஜயகாந்த் அவர்கள் அரசியலில் சில சதிகாரர்களின் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டதும், நன்றி மறந்து அவருக்கு துரோகம் செய்தவர்கள் பற்றியும் பல உண்மைச் சம்பவங்கள் தற்பொழுது பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. கேப்டனின் இழப்பு ஒரு பக்கம், அவரை கடுமையாக நோகடித்த துரோகிகள் ஒரு பக்கம் என இரண்டும் கேப்டனின் ரசிகர்களை வாட்டி வதைத்து விட்டது.

குறிப்பாக, அரசியல் பொது மேடையில் கேட்டனை மிகவும் இழிவாக பேசிய நடிகர் வடிவேலு மீதுதான் ஒட்டுமொத்த பேரும் கடும் கோபத்தில் இருந்தனர். சோசியல் மீடியா முழுவதும் நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்படியான நிலையில், வடிவேலு மட்டும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தால் அவர் என்ன நிலைமைக்கு ஆளாகி இருப்பார் என்பதே பெரும் கேள்வி குறி.?

அந்த அளவிற்கு, கட்சித் தொண்டர்கள் உட்பட ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் கொந்தளித்து இருந்தனர். வடிவேலு மட்டும் இன்றி, நடிகர் விஜய் மீதும் அவர்கள் பெரும் மக்களுக்கு கோபம் இருந்தது.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு நள்ளிரவில் சென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த மக்கள் பலரும் “வெளியே போ! வெளியே போ” என்று விஜய்யை பார்த்து கோஷம் எழுப்பினர்கள்.

ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாத விஜய், கனத்த இதயத்தோடு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். அந்த சமயம் கூட்டத்தில் இருந்த ஒருவர் விஜயை நோக்கி செருப்பை எறிந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
இந்த சூழலில், ஏன் கேப்டனின் ரசிகர்கள் விஜய் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது.

அதாவது, நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய காந்த், உடல்நிலை தேறிய நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அப்போது ஏராளமான பிரபலங்களும், கட்சித் தொண்டர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார்கள். ஆனால், விஜய் ஒருமுறை கூட கேப்டனை நேரில் சென்று பார்க்கவில்லை. இது தான் கேப்டனை நேசிக்கும் அனைவருக்கும் விஜய் மீது வெறுப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

ஆனால், நடிகர் விஜய் பலமுறை கேப்டனை சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்று கடந்த சில தினங்களாக ஒரு தகவல் விஜய் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தில் தப்பிக்க விஜய் தரப்பில் இருந்து திட்டமிட்டு இது போன்ற செய்தியை பரப்பிவிட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.

அதாவது, சமீப காலமாகவே, விஜயின் நடவடிக்கைகள் அரசியல் நகர்வாக பார்க்கப்படும் நிலையில், அவர் சீமான், திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள் பலருக்கு போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் கேப்டனுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தநாள் வந்த போது விஜய் வாழ்த்து எதுவும் சொல்லவில்லை.

இப்படி தொடர்ந்து விஜய் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டதை விஜயகாந்த் அவரது குடும்பத்தினரும்
பெரிய மனப்பான்மையுடன் பொறுத்துக் கொண்டாலும் விஜயகாந்தை நேசிக்கு மக்கள் விஜய் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். உடல் நிலை சரியில்லாதரை அனுமதி கேட்டா பார்க்க செல்வார்கள். நல்லவேளை இறந்தபிறகு இறந்தவர் அனுமதி தரவில்லை அதனால் துக்கம் விசாரிக்க செல்லவில்லை என சொல்லாமல் விட்டார்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.