கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் தந்தை SA சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது. அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தியும் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் அப்போது வெளியிட்ட வெளியிட்ட அறிக்கையில் என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்களின் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதன் பின்பே விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை தொடர்ந்து, பின்பு விஜய் அவருடைய தந்தை மற்றும் தாய் இருவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்டுகிறது. இதன் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
இப்படி விஜய் மற்றும் அவருடைய தந்தை இருவருக்கும் இடையிலான உரசல் தொடர்ந்து கொண்டே சென்ற நிலையில், விஜய் நடித்த வாரிசு படம் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது, விஜய் நிஜ வாழ்க்கையில் தாய் – தந்தையை விட்டு பிரிந்து வாழும் விஜய், சினிமாவில் தந்தை மீது பாசமாக இருப்பது போன்று நடித்துள்ளார், முதலில் நிஜ வாழ்க்கையில் விஜய் அவருடைய தாய் – தந்தையை மதிக்க வேண்டும் என வாரிசு படம் வெளியான போது விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய அரசியல் நகர்வுகளை சாதுர்யமாக நகர்த்தி வருகிறார் விஜய். மேலும் எதிர்காலத்தில் தனக்கு அரசியல் ரீதியாக, தன்னுடைய தாய் – தந்தை கூடவே விஜய் ஒற்றுமையாக இல்லை என்கிற விமர்சனத்தாய் தவிர்க்கவே, சமீபத்தில் விஜய் அவருடைய தாயை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட செய்துள்ளார் விஜய், ஆனால் விஜய் இன்னும் அவருடைய தந்தை உடன் சமரசமாக வில்லை என்றும்.
அதனால் தான் விஜய் அவருடைய தந்தை உடன் இணைந்து புகைப்படம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், என்ன விஜய் இது, அம்மா வேண்டும், அப்பா வேண்டாமா.? இது உஙக்ளுக்கே நியாமா.? விஜய் அம்மா உடன் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.