சூர்யா தேவையே இல்லை… சூர்யாவை புறக்கணித்த ரஜினி.. சூர்யா – ரஜினி என்ன பிரட்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ஜெயிலர். இந்நிலையில் நெல்சனிடம் ஜெயிலர் படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல் காட்சியில் நடிக்கும் வாய்ப்பை அமைத்து தரும்படி சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், சில நிமிடம் மட்டும் கெஸ்ட் ரோலாக வந்து போனால், சினிமாவில் என்னுடைய மதிப்பு மேலும் அதிகரிக்கும்,

இதில் நடிக்க எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார். நண்பன் ஆசையை நிறைவேற்ற ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெரும் வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் நெல்சன். அதற்கு ரஜினிகாந்த் என்னுடைய படம் என்னுடைய படமாகவே இருக்கட்டும் வேறு ஒரு நடிகர் இதில் என்ட்ரி கொடுக்க வேண்டாம் என மறுத்துவிட்டார்.

இதே போன்று நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குனர் ரஞ்சித்யிடம், காலா படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வரும்படி தனக்கு கெஸ்ட் ரோல் நடிக்கும் வாய்ப்பை கேட்டுள்ளார். ரஞ்சித் இது குறித்து ரஜினிகாந்திடம் கேட்டபோது. என்னுடைய படம் ரஜினிகாந்த் படமாக தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தனுஷ் எனது மருமகனாக இருந்தாலும், என்னை பொருத்தவரை சினிமா வேறு, குடும்பம் வேறு. என்னுடைய படத்தில் கெஸ்ட் ரோலாக வரவேண்டும் என்றால் என்னை விட பெரிய நடிகரான அமிதாப்பச்சன், போன்றோர் வரலாம் என மருமகன் தனுசுக்கு தன்னுடைய படத்தில் கெஸ்ட் ரோல் ஆக வருவதை ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லை.

இப்படி தன்னுடைய படத்தில் பிற நடிகர்கள் கெஸ்ட் ரோலாக வருவதை அனுமதிக்காத ரஜினிகாந்த் அடுத்து கமிட்டாகியுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோல் செய்திருப்பார். சூர்யா நடித்த ரோல்ஸ் கதாபாத்திரம் மிக பெரிய எ,அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கம் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடிகர் சூர்யா நடிப்பதற்காக கதையை ஏற்படும் செய்யும் முடிவில் இருந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் படத்தில் கெஸ்ட் ரோலாக நடித்தாச்சு, அடுத்து ரஜினி படத்தில் அதே போன்ற ஒரு வாய்ப்பு என்றால் வேண்டாம் என்றா சொல்வார் சூர்யா அவரும் ரஜினி படத்தில் நடிப்பதற்கு தயாராக இருந்துள்ளார்.

இந்த தகவல் ரஜினியின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே எப்போது போன்று என்னுடைய படம் ரஜினிகாந்த் படமாக தான் இருக்க வேண்டும், அது சூர்யாவின் படமாக இருக்க கூடாது அதனால் என்னுடைய படத்தில் வேறு ஒரு நடிகர் கெஸ்ட் ரோலாக நடிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என என தன்னுடைய முடிவை தெரிவிதித்துள்ளார் ரஜினி. இதனால் ரஜினி – லோகேஷ் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.