ஒரு கை பார்த்து விடுவோம்… துணித்து இறங்கி அடிக்க தயாரான விஜய்..

0
Follow on Google News

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வழக்கம்போல் ஒரு ஆடிட்டேரியத்தில் வைத்து முடித்து விடாமல், ஒரு பொது இடத்தில் குறிப்பாக சென்னையை தவிர்த்து, தென் மாவட்டங்களில் தன்னுடைய பெரும்பாலான ரசிகர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் போல் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை நடிகர் விஜய் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கம் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது திடீரென இயக்குனர் வெங்கட் பிரபுக்கு தன்னுடைய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு நடிகர் விஜய் படத்தை இயக்குவதற்கான முக்கிய காரணமே விஜயின் அரசியல் பின்னணி தான் என்கின்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் சமீப கால அரசியல் நகர்வுகளை மிகத் தீவிரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் வாரிசு அரசியல் திணிப்பு, சிறுபான்மை மதத்தவரை தீவிரவாதி என முத்திரை குத்துவது, விமான நிலையக் கூரை இடிவது, கட்சி பேனர் விழுந்து சாலையில் செல்வோர் உயிரிழப்பது என பல அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்திஇருப்பார் வெங்கட்பிரபு.

மாநாடு படத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சீண்டுவது போன்று ஒரு காட்சி அமைத்திருக்கும், அதில் ஒய் ஜி மகேந்திரன் அவருடைய அரசியல் கட்சி தலைவரான SA சந்திர சேகரை பார்த்து, என்னையா கட்சி நடத்துறீங்க, நீ முதல்ல உன்ன தலைவன் சொல்ல சொன்னீங்க, அடுத்து உங்க புள்ளைய தலைவன் சொல்ல சொல்லுவீங்க, அதற்குப் பின்பு அவன் பிள்ளையை தலைவன் என்று சொல்லச் சொல்வீர்கள், இதே தான் உங்களுக்கு வேலையா.?

வழக்கம்போல் உங்க வீட்டிலே தலைவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நாங்க எப்போது தலைவன் ஆவது, காலம் முழுவதும் கொடிய பிடித்துக் கொண்டு உங்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டே இருக்கணுமா.? ஏன் எங்களுக்கு பதவி ஆசை வரக்கூடாதா என ஒய் ஜி மகேந்திரன் மாநாடு படத்தில் பேசிய இந்த வசனம் தான் நடிகர் விஜய்யை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தன்னுடைய அரசியல் அதிரடிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உடனே ஒரு அரசியல் சார்ந்த படத்தை கொடுத்தாகவேண்டும் என விரும்பிய விஜய்.இயக்குனர் வெங்கட் பிரபுவை விஜய்யே நேரில் அழைத்து நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம், ஆனால் அந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாநாடு படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை சுட்டி காட்டிய விஜய் அதேபோன்று படம் முழுக்க பரபரப்பான ஒரு அரசியல் படமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் அந்த படத்தில் வைக்கும் வசனங்களோ காட்சிகளோ ஏதேனும் பிரச்சனையோ சர்ச்சை ஏற்படுத்தும் என்று பயப்படத் தேவையில்லை எதையும் எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறேன். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்க வேண்டும் என வெங்கட்பிரபுவுக்கு உத்தரவு போட்டுள்ளார் விஜய். 2024 மே மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு அதாவது 2024 பொங்கலுக்கு இந்த படம் வெளியாக வேண்டும் என விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த படம் திரைப்படம் மூலம் வெளியாகி பல அரசியல் கட்சிகளை கலக்கம் அடைய செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் அதிரடியை வரும் 2024 பாராளுமன்றத்தில் விஜய் தொடங்குவதற்கான ஆயத்த பணியில் மிக தீவிரமாக விஜய் செயல்பட்டு வருவது அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.