எல்லாம் ரெடியாக இருக்கிறது இன்னும் அன்பு விடுவது தான் பாக்கி என தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், பின்பு அம்பு விடாமலே, அதாவது அரசியல் கட்சி தொடங்கமேலே, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரை நம்பி இருந்த ரஜினி ரசிகர்களையும், மற்றும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி மாற்றத்தை கொண்டு வருவார் என எதிர்ப்பார்த்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார் ரஜினிகாந்த்.
நடிகர் விஜய் அரசியலுக்கு, வருவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ரஜினி சொன்னது போன்று இன்னும் அம்பு விடுவது தான் பாக்கி மற்ற அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்பது போல அரசியலில் தன்னுடைய நகர்வுகளை சாதுரியமாக மிக தீவிரமாக நகர்த்தி வரும் விஜய், இன்னும் தான் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது ஒன்றுதான் பாக்கி.
இந்த நிலையில் இதற்கு முன்பு அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, பின்பு கட்சி தொடங்காமலே அரசியல் இருந்து விலகிய நடிகர் ரஜினிகாந்த், மற்றும் அரசியல் கட்சி தொடங்கி தற்பொழுது அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போன நடிகர் கமல்ஹாசன். அதேபோன்று அரசியல் கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல தரப்பிலிருந்து பல இன்னல்களை சந்தித்த நடிகர் விஜயகாந்த்.
இப்படி தொடர்ந்து சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு சென்றவர்கள் சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்ட நடிகர் விஜய். தன்னுடைய ஒவ்வொரு அரசியல் நகர்வுகளை மிக கவனமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ஓய்வு பெற்ற இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பின்னணியிலிருந்து அரசியல் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மூத்த அரசியல் தலைவர்கள் இலக்கியவாதிகள் என பலரை நேரில் அழைத்தும் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருவது குறித்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் என்ட்ரி கொடுப்பார் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவரையெல்லாம் காத்திருக்க மாட்டார் அதற்கு முன்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின்அரசியல் என்ட்ரி இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தை சேர்ந்தவர்களும் சென்னை உட்பட பல மாவட்டக்களில் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில்,13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதால் வயதின் காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிக்கத்தனர் இதனால் வேட்பாளர் ஏமாற்றம் அடைந்து சோகத்துடன் காட்சியளித்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு கூட தெரியாத விஜய் ரசிகர் படிக்கிற வயதில், பள்ளிக்கு போகாமல் எதற்கு இந்த விளையாட்டு என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பெருமளவு ஸ்கூல் படிக்கிற பசங்க தான் அதிகம் என்பதால், அரசியல் பற்றி எந்த ஒரு அடிப்படை தெரியாமல் அவர்களை தன்னுடைய அரசியலுக்கு எப்படி விஜய் பயன்படுத்த போகிறார் என்பது தான் விஜய்க்கு தற்பொழுது ஏற்பட்டுளள மிக பெரிய சவாலாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.