இந்த முறை சிக்கியது கமல்ஹாசன்… மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி…

0
Follow on Google News

தமிழ் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றவர் பின்னணி பாடகி சின்மயி. அதில் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தையும் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தார் சினிமயி, அதில்,சில ஆவணங்களில் கையெழுத்திட நான் வைரமுத்தின் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு இசைநிகழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன்…

கதவு திறந்திருந்தது. நான் உள்ளே சென்று கையெழுத்திட்டேன். அவர் தனது மேஜையின் ஒரு புறம் அமர்ந்திருந்தார் நான் மறுபுறம். அவர் தன் முனையில் இருந்து எழுந்து என்னிடம் வந்தார், நானும் மரியாதை நிமித்தமாக எழுந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்… நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு விரைந்து கீழே ஓடினேன்.

வைரமுத்துவின் மனைவி பொன்மணி மற்றும் என் அம்மாவுடன் கீழே பேசிகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கீழே என் அம்மாவும் இருந்தார்கள். நான் வேகமாக கீழே ஓடிச்சென்று “நாம் போகலாம்” என்று அம்மாவிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. பின்பு வைரமுத்து என்னைப் பாலியல் துன்புறுத்தியதை அம்மாவிடம் சொன்னேன். அம்மா என்னிடம் அதைக் கடந்து செல்லச் சொன்னார் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைரமுத்து குறித்து சின்மயி தெரிவித்த குற்றசாட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் மீ டூ ஆரம்பித்தது முதல் தற்பொழுது வரை தொடர்ந்து வைரமுத்துவை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள சின்மயி. வைரமுத்து குறித்து எதாவது ஒரு செய்தியோ, அல்லது லேட்டஸ்ட் புகைப்படமோ வந்தால் விமர்சனம் செய்யும் சின்மயி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அர்ச்சனா சமீபத்தில வைரமுத்துவை சந்தித்தத புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த புகைப்படத்தில் அர்ச்சனா தலையில் கை வைத்து வைரமுத்து ஆசிர்வதிப்பது போன்ற இருந்தது. இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் அவர்களுடன் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தனர். நடிகை அர்ச்சனாவின் இந்த புகைப்படத்திற்கு சின்மயி தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது , இது போலத்தான் அனைத்தும் ஆரம்பிக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்கையில் யாரையேனும் துணைக்கு வைத்திருங்கள், அவரிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள் என சின்மயி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் “டெல்லியில் போராடும் பெண் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன்.

அதில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லத்து அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என பதிவிட்டு இருந்தார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்த சின்மயி, தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கு துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும்” என கேள்வி எழுப்பி உள்ளார்.