நடிகர் விஜய் நடிக்கும் புதிய படம் வாரிசு, இந்த ஆந்திராவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் வெளியான தெலுங்கு படங்கள் லாபகரமான தொடர் வெற்றியை தெலுங்கு சினிமா மட்டுமின்றி பிற மொழிகளிலும் பெற்று வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து படப்பிடிப்புக்கான செலவை அங்கே அதிகமாக செய்கின்றார்கள், அதனால் படத்தின் தரம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஆனால் தமிழில் பட்ஜெட்டில் 80 சதவீதம் நடிகர்களின் சம்பளத்துக்கு சென்று விடுகிறது, பாக்கி வெறும் 20 சதவிகிதத்தில் தான் அந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அந்த படத்தின் கதை, கதைக்களம், திரைக்கதையில் தரம் இல்லாமல் இருப்பது தான், தமிழ் படங்களின் தோல்விக்கு காரணம் என்று கூட சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் நடிக்கும் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் ஒரு கமர்சியலான குடும்ப படமாக முழுக்க முழுக்க தெலுங்கு சினிமா பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு விஜய்க்கு மட்டும் சுமார் 120 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது, இதனால் இந்த படம் அதிக வசூல் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என்கின்ற சந்தேகம் தயாரிப்பாளருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு நடிகர் விஜய்க்கு மட்டும் சுமார் 120 கோடி வரை சம்பளம் பேசப்பட்ட நிலையில் மிகக் குறைந்த செலவில் தான் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன,இதனைத் தொடர்ந்து நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்கு முக்கியத்துவம் இல்லாத இந்த சினிமா உலகில் இனி தான் படம் எடுக்கப் போவதில்லை என்கின்ற முடிவுக்கு இந்த படத்தின் இயக்குனர் வந்துள்ளார்என்கிற செய்தி வெளியானது.
இதனால் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி இந்த படத்துடன் சினிமா விட்டே விலகுகிறேன் என்கின்ற முடிவில் அவர் இருப்பதாக தகவல் வெளியானது குறித்து இயக்குனர் வம்சி கூறுகையில், சினிமா மீதான ஆர்வம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது, மேலும் சமீப காலமாக மக்களின் ரசனைகள் மாறிவிட்டது, அதனால் தான் இனி படம் இயக்குவதை நிறுத்தப் போவதாக அதிரடி முடிவெடுத்துள்ளார் வம்சி.