தமிழக வெற்றி கழகம் என தனுடைய புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், கட்சி பெயரிலே பல குழப்பங்கள் நீடித்து அது பெரும் விமர்சனமாகி உள்ளது. இது குறித்து பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘வெற்றி கழகம்’ என்பது சரியா? அல்லது ‘வெற்றிக் கழகம்’ என்பது சரியா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்,
உடன் தொக்க தொகையில் ஒற்று ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை அமையாது. மற்ற 2, 3, 4, 5, 7 வேற்றுமைகளில் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் வலி மிகும். (அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
எடுத்துக்காட்டாக : கஞ்சி + தொட்டி = கஞ்சித் தொட்டி (கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி.)
வெற்றி + திருமகன் = வெற்றித் திருமகன் (வெற்றியைப் பெற்ற திருமகன்.) ‘வெற்றிக் கழகம்’ என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? என தெரிவித்துள்ள ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் விஜய்யின் கட்சி பெயரில் வெற்றி கழகத்தில் ஒற்று பிழை உள்ளது என தமிழ் அறிஞர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தாலும் வெற்றிக் கழகம் என க் வைத்து மாற்றித்தான் பதிவு செய்தாக வேண்டும். மொழியில் பிழை என சொல்லும் போதே அதை சரி செய்து மொழியை காக்க திராணி இல்லாதவர், எப்படி அந்த மொழியை பேசும் இனத்தை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. விஜய் இதை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு தமிழனா இதை முழுக்க முழுக்க உரத்த குரலில் எதிர்ப்பேன் என ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் என்பது சரியான தமிழ் இலக்கணம் தான் என விளக்கமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த தமிழக வெற்றி கழகம் அல்லது தமிழக வெற்றிக் கழகம் இதில் எது சரியான தமிழ் இலக்கணம்? இரண்டுமே சரியான தமிழ் இலக்கணம் தான் என்றும்,
“வெற்றி” என்ற பெயர்ச்சொல் “கழகம்” என்ற பெயர்ச்சொல்லுக்கு வினையடை பெயராக வருகிறது. “தமிழக வெற்றி” என்ற தொடர் “வெற்றிகரமான தமிழகம்” என்ற பொருளைத் தருகிறது. அதே போன்று “வெற்றி” என்ற பெயர்ச்சொல் “கழகம்” என்ற பெயர்ச்சொல்லுக்கு உரிச்சொல்லாக வருகிறது.”தமிழக வெற்றிக் கழகம்” என்ற தொடர் “தமிழகத்திற்கு சொந்தமான வெற்றி கழகம்” என்ற பொருளைத் தருகிறது. எனவே, எந்த அர்த்தத்தை வலியுறுத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இரண்டில் எதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
தற்போது, “தமிழக வெற்றி கழகம்” என்ற வடிவம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரும் “தமிழக வெற்றி கழகம்” தான். எனவே, “தமிழக வெற்றி கழகம்” என்ற வடிவம் தான் தற்போது அதிகம் சரியானதாக கருதப்படுகிறது என விஜய் தமிழக வெற்றி கழகம் என்று இடையில் க் இல்லாமல் வைத்துள்ளதும் சரி தான் என தமிழ் அறிஞர்கள் சிலரும் விளக்கம் கொடுத்துவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.