ஒரு பொறுப்பு வேண்டாமா.? விஜய்யை பளார் விட்ட தந்தை SA சந்திரசேகர்… தோலுக்கு மேல் வளர்ந்த மகனை அடிக்கலாமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் சினிமாவில் இன்று மிக பெரிய உச்சத்தில் தளபதியாக இருந்து, இன்று அரசியலில் என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு தலைவராக உருவெடுக்க தொடங்கியுள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம், விஜய் என்கிற ஒரு நபரை, நடிகனாக, தலைவனாக உருவாக்க அவரை பார்த்து பார்த்து செதுக்கிய விஜய் தந்தை SAC சந்திரசேகர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்று விஜய் அருகில் SAC சந்திரசேகர் இருக்க வேண்டிய இடத்தை புஸ்ஸி ஆனந்த் தக்கவைத்து கொண்டதும், தந்தையை விஜய் ஒதுக்கி வைப்பதின் பின்னனி என்ன என்கிறகுழப்பம் பலருக்கு நீடித்து வருகிறது.

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றி வந்த புஸ்ஸி ஆனந்த். ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு பெரும் பணத்தை சம்பாரித்து வந்தவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஆனந்த், இந்த வெற்றிக்கு பின்பு புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்பட்டார். அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதிவி முடிந்ததும் விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த புஸ்ஸி ஆனந்த்.

விஜய் தந்தை SA சந்திரசேகரை புதுச்சேரிக்கு அழைத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்களை கூட்டி மிக பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்வுக்கு பின்பு எதிர் காலத்தில் என் மகன் விஜய் தமிழகத்தில் முதல்வர் என்றால், நீ புதுச்சேரியில் முதல்வர் என புஸ்ஸி ஆனந்தை உற்சாகப்படுத்திய SA சந்திரசேகர், சென்னை திருப்பியதும் மகனிடம் புதுச்சேரியில் நடந்த நிகழ்வை பற்றி பெருமையாக பேசுகிறார்.

மேலும் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் அனுபவம் உண்டு விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் பற்றி பெருமையாக பேசி, விஜய்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார் SA சந்திரசேகர். இந்நிலையில் விஜய் மன நிம்மதிக்காக வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வது வழக்கம் அப்போது உடன் புஸ்ஸி ஆனந்தை அழைத்து செல்லும் போது, அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிப்பது என விஜய் புஸ்ஸி ஆனந்த் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிறது.

விஜய் மீது அவருடைய தந்தை SA சந்திரசேகர் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்வார், ஒருமுறை நிலவே வா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, இந்த படத்தை விஜய் தாய் தயாரிக்கிறார், மேற்பார்வையாளராக விஜய் தந்தை செயல்படுகிறார், படப்பிடிப்பில் அனைவரும் தயாராக இருக்க விஜய் மட்டும் வரவில்லை, அப்போது செல் போன் இல்லாததால் எங்கே விஜய் என பட இடங்களுக்கு லேன் லைன் மூலம் அழைத்து விசாரிக்கிறார் விஜய்.

நபர்களை பார்க்க சென்ற விஜய் மிக தாமதமாக படப்பிடிப்புக்கு வர, கன்னத்தில் பளார் என அங்கே இருந்த அவருடைய தந்தை SA சந்திரசேகர் படப்பிடிப்பு தளத்தில் பலர் முன்னிலையில் அடி கொடுத்தவர், தொழிலில் நேரம் முக்கியம் என அறிவுத்தியதாக கூறப்படுகிறது. இப்படி விஜய் மீது அவருடைய தந்தைக்கு இருந்த கட்டிப்பு நாளடைவில் விஜய்க்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

ஒரு கட்டத்தில் விஜய் அவருடைய தந்தை SA சந்திரசேகர் இடையில் இடைவெளி உருவாக, அதை சரியாக பயன்படுத்தி விஜய் உடன் நெருக்கமாகி விஜய்க்கு எல்லாம் இனி நான் என்கிற நிலைக்கு வந்து விட்டார் புஸ்ஸி ஆனந்த், அதே நேரத்தில் விஜய் மற்றும் அவருடைய தந்தை இருவர்க்கும் இடையில் உள்ள பிரச்சனையை பேசி சரி செய்து ஒன்று சேர்ந்து விட்டால் மீண்டும் உள்ளே SA சந்திரசேகர் வந்துவிடுவார் என்பதால் விஜய்யும் அவருடைய தந்தையும் ஓன்று சேர்ந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட விஜய் தாய், சோபா மற்றும் தந்தை SA சந்திரசேகர் இருவரும் மகன் விஜய்யை பார்க்க சென்ற போது, அவர் முகத்தை கூட தனக்கு பார்க்க பிடிக்கவில்லை என அப்பா மீது இருந்த கோபத்தை விஜய் வெளிப்படுத்தியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.