காக்க வைத்து ஏமாற்றிய விஜய்… கை கொடுத்து தூக்கி விடும் சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். முதல் படமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த முருகதாஸ், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் வெற்றியின் மூலம் டாப் இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார், இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த துப்பாக்கி படத்தை இயக்கியவர் முருகதாஸ்.

நடிகர் விஜயின் சினிமா கேரியரில் துப்பாக்கி படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்பொழுது வரை கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ். இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தார் போது தர்பார் படத்தை முடித்துவிட்டு அடுத்த முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து படம் நடிக்க விரும்பிய விஜய் நேரில் முருகதாஸை அழைத்து கதை கேட்டு ஓகே செய்துவிட்டு தர்பார் முடித்துவிட்டு வாங்க பண்ணலாம் என தெரிவித்துள்ளார் விஜய்.

ஆனால் தர்பார் படம் தோல்வியை தழுவியதும், ஒரு தோல்வி படம் கொடுத்த இயக்குனரிடம் மீண்டும் இணைவதா.? என முருகதாஸை கழட்டி விட முடிவு செய்து, தனக்கு கதை பிடிக்கவில்லை. அதனால் இந்த படத்தை ட்ராப் செய்வதாக தெரிவித்துள்ளார் விஜய். அத்துடன் இந்த படம் கைவிடப்பட்டது. இதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு துப்பாக்கி படம் மூலம் சினிமாவில் அவரை மீட்டெடுத்தவர் முருகதாஸை கைவிட்டு நன்றி மறந்த விஜய்யின் செயல் முருகதாஸுக்கு மிக பெரிய மன உளைச்சலை பெற்று தந்துள்ளது.

பலமுறை முருகதாஸிடம் கதை கேட்ட விஜய் காக்க வைத்து உறுதி செய்யாமலே இருந்துள்ளார். இருந்தும் விஜய் தனக்கு கால் சீட் கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த முருகதாஸுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி கால்ஷீட் கேட்டு வந்த முருகதாஸுக்கு எந்த ஒரு நடிகரும் கால்ஷீட் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக தன்னுடைய இயக்கத்தில் இதற்கு முன்பு நடித்து வெற்றி பெற்ற பல நடிகர்களை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டுள்ளார் முருகதாஸ். அந்த வரிசையில் நடிகர் அஜித்தை முருகதாஸால் நெருங்க கூட முடியவில்லை. ஏழாம் அறிவு, கஜினி போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை நடிகர் சூர்யாவுக்கு கொடுத்தவர் முருகதாஸ், அந்த வகையில் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குவதற்கு சூர்யாவிடமும் கால்ஷீட் கேட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ், ஆனால் அவரும் கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு ஓகே சொல்லியதால் விரைவில் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில். தற்பொழுது அதிகார பூர்வ அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் பல நடிகர்களுக்கு ஹிட் படம் கொடுத்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தன்னுடைய படத்தின் நடிக்க தயங்கியவர்கள், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க மறுத்ததற்கு வருத்தம் அடைய செய்யும் வகையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரமணா, துப்பாக்கி, தீனா போன்று அமையும் என்கின்ற நம்பிக்கையில் முருகதாஸ் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது