தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி கணேசன், அவரை தொடர்ந்து ரஜினி-கமல் அதன் பின்பு விஜய்- அஜித் என தொடர்ந்து காலகட்டத்திற்கு ஏற்ப சினிமாவில் இரண்டு நடிகர்ககளுக்கு இடையில் போட்டியும் அவர்களின் ரசிகர்களுக்கு இடையில் மோதலும் நடைபெற்று வருகிறது. ரஜினி- கமல் இடையே தற்பொழுது போட்டியும் இல்லை, அவரது ரசிகர்களும் சண்டையிட்டு கொள்வதும் கிடையாது.
ஆனால் விஜய் – அஜித் இருவருக்கும் இடையில் சினிமாவில் இருக்கும் போட்டியும், இரண்டு ரசிகர்களுக்கு இடையில் நடக்கும் மோதலும் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. விஜய் – அஜித் ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் சினிமாவில் ஒரு போட்டி இருந்தது. விஜய் படத்தில் அஜித் எதிரான வசனங்கள் பேசுவது, அதேபோன்று அஜித் படத்தின் விஜய்க்கு எதிரான வசனங்கள் பேசுவது, இதனால் இவர்களிடம் ரசிகர்கள் இடையே மோதல் போக்கை உருவாக்கியது.
மேலும் இரண்டு தரப்பு ரசிகர்களின் மோதல் தான் அஜித் – விஜய் இருவரின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இருவரின் படத்திலும் யாரை யாரையும் தாக்குவது போன்ற வசனங்கள் இடம் பெறுவது கிடையாது. மேலும் இருவரும் அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் சந்தித்த புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் பொதுவாகவே அஜித் மனைவி ஷாலினி மற்றும் விஜய் மனைவி சங்கீதா இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி கொள்வார்கள் என்றும், இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் மற்றும் விஜய் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து நீண்ட நேரம் பேசி கொள்வதகாவும், சினிமாவில் வியாபார ரீதியில் இருவரும் அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்று பேசுவார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து விட்டார்கள் என்கின்ற அதிகாரப்பூர்வமான ஒரு தகவல் வெளியானால், மேலும் இருவருமே நண்பர்கள் தான் என்று இருவரின் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டால். ரசிகர்கள் இடையே போட்டி இருக்காது. இதனால் அஜித் மற்றும் விஜய் இருவரின் படத்திற்கும் போட்டி இல்லாமல் மற்ற நடிகர்கள் படம் போல் கடந்து சென்று விடுவார்கள்.
அதனால் தான் அஜித் மற்றும் விஜய் இருவரும் வெளிப்படையாக சந்திக்காமல் ரகசியமாக சந்தித்து வருகின்றனர்.ரஜினி- கமல் இருவரும் எப்படி ஒரு காலத்திற்குப் பின்பு தங்களை நல்ல நண்பர்கள் என்று காட்டிக் கொண்டார்களோ, அதே போன்று அதற்கான காலம் வரும்போது அஜித் மற்றும் விஜய் இருவரும் வெளிப்படுத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.