விஜய் ஜாதகப்படி அவர் சினிமாவில் மிக பெரிய உச்சத்தை அடையும் போது அரசியலிலும் வெற்றியை பெறுவார் என்பது தான், அந்த வகையில் சினிமாவில் உயரத்துக்கு வந்த விஜய்யை அரசியலில் என்ட்ரி கொடுக்க வைத்து வெற்றி அடைய வைக்கும் முயற்சியில் இறங்கினார் அவருடைய தந்தை SAC சந்திரசேகர், ஆனால் விஜய் அரசியலில் நுழைவது அவருடைய மனைவிக்கு விருப்பம் இல்லை.
விஜய் சம்பாரிக்கும் படத்தில், இந்தியாவில் வாங்கும் சொத்துக்கள் விஜய் பெயரிலும், வெளிநாடுகளில், குறிப்பாக லண்டனில் வாங்கும் சொத்துக்கள் அனைத்தும் மனைவி சங்கீதா பெயரிலும் வாங்கப்பட்டு வந்துள்ளது, அந்த வகையில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் 60 வயது வரை ஹீரோவாக நடித்து இன்னும் பல கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி குவிக்க வேண்டும் என்பது மனைவி சங்கீதாவின் ஆசையாக இருந்துள்ளது.
உதாரணத்துக்கு ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன பின்பு கடைசி நேரத்தில் பின்வாங்கியது கூட அவரது மனைவி லதா சினிமாவில் நன்றாக சம்பாரிக்கலாம் எதுக்கு அரசியல் என குடுப்பதினார் கொடுத்த அழுத்தம் தான் ரஜினி அரசியலுக்கு வருவது தடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சினிமா என்கிற தங்க முட்டை இடும் வாத்தை விட்டு விட்டு அரசியலுக்கு விஜய் வருவதற்கு கடும் எதிப்பை தெரிவித்து வந்துள்ளார் சங்கீதா.
ஒரு கட்டத்தில் விஜய் – சங்கீதா இடையே விஜய் அரசியல் வருகைக்காக சண்டை உச்சக்கட்டம் அடைய இந்த சண்டைக்கெல்லாம் காரணம் விஜய் தந்தை ச சந்திரசேகர் தான் என அவருடைய தலை குடும்பத்துக்குள் உருள, என்னால் உங்களுக்குள் சண்டை வேண்டாம் என விஜய் உடனான தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி கொண்டு விஜய் அரசியலையும் தற்காலிகமாக தள்ளி வைக்கிறார் SA சந்திரசேகர்.
இந்த கேப்பில் உள்ளே புகுந்த புஸ்ஸி ஆனந்த், விஜய் மற்றும் அவருடைய மனைவி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியவர், மிக பிரபலமாக இருக்க கூடிய ஐயரை அழைத்து இனி விஜய் – சங்கீதா இடையில் எந்த பிரச்சனையும் வர கூடாது என யாகம் எல்லாம் விஜய் வீட்டில் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை வர, மீண்டும் விஜய் – சங்கீதா இடையில் மோதல் ஏற்படுகிறது, அப்போது பல கோடியில் லண்டனில் தீவுகள் வாங்க வேண்டும், இன்னும் பல சொத்துக்களை வாங்க வேண்டும், அதெல்லாம் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடித்தால் தான் முடியும், அரசியலுக்கு சென்றால் சினிமாவும் காலியாகிவிடும், இதுவரை சினிமாவில் சம்பாரித்த பணமும் வீணாகிவிடும் என சங்கீதா, விஜய் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இருந்தும் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பதில் உறுதியாக இருந்துள்ளார், மேலும் புஸ்ஸி ஆனந்தும் விஜய் அரசியலுக்கு வருவது தான் சரி என ஒரு பக்கம் விஜய்யை உசுப்பேத்தி விட, இருக்கிற பணத்தை எல்லாம் அரசியலில் செலவு செய்துவிட்டால், நாங்கள் என்ன குடும்பத்துடன் தெருவில் நிற்க்க வேண்டுமா என சங்கீதா கோபத்தில் கொந்தளிக்க, விஜய் மகன் மற்றும் மகள் இருவரும் விஜய் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் சங்கீதா அவர் பெயரில் வாங்கிய சொத்துக்களை நான் பார்த்து கொள்கிறேன், இந்தியாவில் உங்க பெயரில் வாங்கிய சொத்துக்களை வைத்து என்னமோ பண்ணுங்க என விஜய் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு சண்டையிட்டு சங்கீதா பிரிவதற்கு முக்கிய காரணம் விஜயின் அரசியல் என்ட்ரி தான் என்று கூறப்படுகிறது.