ரஜினியை வேண்டாம் என விக்ரம் தூக்கி வீச இது தான் காரணமாம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது நடித்தவரும் ஜெயிலர் மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துவரும் லால் சலாம், ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம், மற்றும் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் மற்றொரு படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளார் ரஜினிகாந்த், இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் தான் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது.

அதற்கு முன்பு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிகர் விக்ரமை வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் பல மோடி சம்பளம் கொடுத்தும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகர் விக்ரம் எதற்காக மறுத்தார் என சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது, பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் பெரும்பாலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் அல்லது தனக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களை தன்னுடைய படத்தில் இணைந்து நடிக்க விரும்ப மாட்டார். இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தன்னுடைய படமாகவே இருக்க வேண்டும் என்பதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றவர் ரஜினிகாந்த்.

அந்த வகையில் காலா படத்தில் ஒரு சிறிய ரோல் பண்ணுவதற்காக மருமகன் தனுஷ் ஆசைப்பட்ட போது கூட, அதற்கு அனுமதிக்காதவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இதற்கு முன்பு விக்ரம் நடித்த பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய சரிவை நோக்கி விழுந்து.

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விக்ரம் தனியாக படம் பண்ணினால் கூட பெரும் தொகை சம்பளமாக கொடுக்க யாரு முன் வராத நிலையில், நடிகர் விக்ரம் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பதற்காக ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பெரும் தொகை சம்பளம் என்றதும் இறங்கி பேச்சுவார்த்தைக்கு வந்த நடிகர் விக்ரம். திடீரென்று ரஜினிகாந்த் வில்லனாக நடிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் பொதுவாக தன்னுடைய படத்தில் எந்த ஒரு முன்னணி நடிகர்களோ.! அல்லது தனக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்ப மாட்டார், ஆனால் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கேரக்டர் அவரை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் விக்ரம் தன்னுடைய படத்தில் வில்லனாக நடிப்பதற்கான ரஜினியிடம் ஆலோசித்த போது அதற்கு ரஜினியும், விக்ரம் இந்த கேரக்டரில் நடித்தார் நன்றாக இருக்கும் என பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ரஜினிகாந்த் படத்திற்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகும், ஆனால் ஒரு கட்டத்தில் எத்தனை கோடி கொடுத்தாலும் தான் ரஜினிகாந்த்திற்கு வில்லனாக நடிக்க மாட்டேன் என விக்ரம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

விக்ரம் முடிவுக்கு முக்கிய காரணம் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக தன்னுடைய ஹீரோ இமேஜை விட்டுவிட்டு அடுத்தடுத்த வெவ்வேறு கதாபாத்திரத்தில் வில்லனாகவோ அல்லது, இரண்டாவது ஹீரோவாக நடிக்கும்போது அது தன்னுடைய சினிமா கேரியருக்கு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றும், மேலும் தற்போது விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்திற்கு பின்பு தன்னுடைய மார்க்கெட் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளாராம் விக்ரம். இதனால் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார் என்பதற்காக தன்னுடைய இமேஜை கெடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ரஜினி படத்தை விக்ரம் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.