பிரபாஸ், அமிதாப்பச்சன் உடன் கமல்ஹாசன் … இதுவரை வெளியாக சினிமா கதை .. சம்பளம் 150 கோடி…

0
Follow on Google News

பாகுபலி, சஹோ, சாலர், போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது இன்னொரு மெகா பட்ஜெட் படமான ஆதி புருஷ் படத்தில் நடித்துள்ளார். இராமாயண கதையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் க்ருத்தி சனோன், சயிஃப் அலிகான் போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து பிக்பெரிய பட்ஜெட் படமான கே படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்திலும், அதன் பிறகு எச் வினோத் இயக்கும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். இதில் ஹெச்.வினோத் படத்தை முடித்துவிட்டு அடுத்து மணிரத்தினம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

இதில் ஹெச்.வினோத் இயக்கும் படம் சிறிய பட்ஜெட் படம் என்றும், இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது, அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் மிக பெரிய ப்ராஜெக்ட் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலக தரத்துக்கு உருவாக இருக்கும் பிரபாஸ் நடிக்க இருக்கும் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரபாஸ் நடிக்க ப்ராஜெக்ட் கே என்ற படத்தை பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக இருக்கும் இந்த படம் இந்திய அளவில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இருக்கிறது. அதாவது இதுவரை இந்திய சினிமாவில் பயன்படுத்தாத பல டெக்னாஜிக்கல் பயன்படுத்த இருக்கும் இந்த படடஹி வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் கமிட்டாகியுள்ளார்கள். இந்நிலையில் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ப்ராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன் இந்த படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் தர ஒப்புக் கொண்டதாகவும், பிக் பாஸ் தமிழ் 7 முடிந்ததும், அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகிய பிரபலங்கள் நடிக்க உள்ள நிலையில் கமல்ஹாசனும் இணைந்தால் இந்த படம் மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இதில் தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும், இந்த படம் அடுத்த வருடம் 2024 ஜனவரி மாதம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் படத்துக்கு நடுவே இந்த படத்திலும் கமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.