இயக்குனர் சங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு மீண்டும் சிம்பு தேவன்- சங்கர் – வடிவேலு கூட்டணி இணைந்தது. இந்த படத்தில் வடிவேலு நடிப்பதற்காக மூன்று கோடி சம்பளம் பேசப்பட்டு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
படத்தின் துவக்க விழாவுக்கான பட பூஜைக்கு அனைவரும் வந்து காத்திருக்க நடிகர் வடிவேலு மட்டும் வரவில்லை. இதனால் கடும் அப்செட் ஆன சங்கர், இயக்குனர் சிம்பு தேவன் மூலம் வடிவேலுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார், ஆனால் வடிவேலு படத்தின் கதை சரியில்லை, அதை மாற்ற வேண்டும், இதை மாற்ற வேண்டும், மேலும் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் அதிகம் வேண்டும் என்று வடிவேலு கேட்டுள்ளார்.
ஒரு வழியாக சம்பளத்தை மேலும் ஒரு கோடி அதிகம் தருவதாக பேசி அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்கள். பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. ஆறு நாட்கள் நடித்த வடிவேலு அதன் பின்பு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று படப்பிடிப்புக்கு வரவில்லை, தொடர்பு கொண்டால் முறையான பதிலும் தரவில்லை. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் புகார் கொடுத்தார்.
இதன் பிறகு வடிவேலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் முடக்கிய வடிவேலுக்கு உதவி செய்யும் வகையில், லைக்கா நிறுவனம் முன் வந்தது, சங்கர் செலவு செய்த பணத்தை கொடுத்து வடிவேலு நடித்த படத்தை லைக்கா கையில் எடுத்து மேலும் நாய் சேகர் ரிட்டர்ன், சந்திரமுகி 2 படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தது லைக்கா நிறுவனம்.
சுமார் பத்து வருடங்கள் சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்த வடிவேலு திருந்தி இனிவரும் நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்த்த நிலையில், வடிவேலு நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை, நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதையில் தலையிட்டு பல மாற்றங்கள் செய்துள்ளார், மேலும் காஸ்டியூம் சரியில்லை, காஸ்டிமர் சரியில்லை, பிரம்மாண்ட செட் அமைத்து ஒரு பாடல் காட்சியும் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக செலவு வைத்துள்ளார் வடிவேலு.
இயக்குனரை சுதந்திரமாக வேலை பார்க்க விடாமல் பல குடைச்சல்களை நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு கொடுத்துள்ளார், மேலும் சந்திரமுகி 2 படத்திலும் பல குழப்பங்களை வடிவேலு செய்து வருவதால், வடிவேலுக்கு உதவி செய்து மீண்டும் சினிமாவில் மறுவாழ்வு கொடுத்த லைக்கா நிறுவனம் மிகப்பெரிய அப்செடில், இந்த இரண்டு படத்துடன் போதும் என்று கும்பிடு போட்டு விரட்டி விட முடிவு செய்து, 23 புலி கேசி இரண்டாம் பாகத்தை கைவிடவும் லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதால், இனி வடிவேலு சினிமா பக்கமே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.