விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை, இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பின்பு சுமார் இரண்டு வருட அஜித் ரசிகர்களின் காத்திருப்புக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் வலிமை. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்தின் ஏற்பட்ட நஷ்ட்டத்தை சரி செய்வதற்காக, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருக்கு மேலும் ஒரு படம் நடிக்க கால் சீட் கொடுத்துள்ளார் அஜித்.

இதனை தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் மற்றும் இயக்குனர் H.வினோத் ஆகியோர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு பின்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா புரெடக்ஷன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறார் அஜித், அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்த படம் கிராமத்து கதை களம் என்றும், இந்த படத்துக்கான கதை, திரைக்கதை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் சிறுத்தை சிவா.

மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க முடிவு செய்து இது குறித்து வடிவேலுவிடம் சிறுத்தை சிவா பேசியதாக கூறப்படுகிறது. அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என வடிவேலுவும் செம்ம குஷியில் இருந்துள்ளார், இது குறித்து அஜித்திடம் பேசிய சிறுத்தை சிவா படத்தின் வடிவேலு இடம்பெறுவது குறித்து தெரிவிக்க, இதை கேட்டது செம்ம டென்ஷனாகியுள்ளார் அஜித்.

வடிவேலு வேண்டாம் என அஜித் திட்டவட்டமாக மறுக்க, சிறுத்தை சிவாவும் சாரி சார் தெரியாம நடந்துருச்சு என தெரிவித்து, வடிவேலுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலு தன்னுடைய படத்தில் நடிப்பது அஜித்துக்கு பிடிக்கவில்லை என்கிற தகவலும் வடிவேலுக்கு சென்றுள்ளது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் வடிவேலு மற்றும் அஜித் நடித்த ராஜா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்தை அவமரியாதை செய்யும் விதத்தில் வடிவேலு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு வடிவேலு உடன் அஜித் நடிக்க மறுத்து வருகிறார். அது தான் சிறுத்தை சிவா படத்திலும் வடிவேலு வேண்டாம் என அஜித் சொன்னதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் படத்தில் இருந்து விரட்டப்பட்ட வடிவேலு, நடிகர் விஜய் வீட்டு கதவை தட்டி அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் கதாபாத்திரத்துக்கு தேவை என்றால் நிச்சயம் அழைப்பு விடுக்கிறோம் என வாய்ப்பு கேட்டு வந்த வடிவேலுவிடம் சொல்லி அனுப்பியுள்ளார் விஜய் என கூறப்படுகிறது.

நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் பிரபுதேவா..! விக்னேஷ்சிவன் – நயன்தாரா உறவில் விரிசல்…