தமிழ் சினிமாவில் காமெடிநடிகராக உச்சத்தில் இருந்து வந்த வடிவேலு, அவர் நடிக்கும் படங்களின் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் அவர் மிகப்பெரிய சிரமத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில், இதனால் சுமார் பத்து வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கினார் வடிவேலு. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன் படத்தில் கதாநாயகனாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த வடிவேலு.
மேலும் அடுத்தடுத்து காமெடி காட்சிகளிலும் சில படங்கள் நடிக்கும் வாய்ப்பை பெற்றார், வடிவேல் நாய் சேகர் படம் வடிவேல் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன் படத்தில் ஆனந்தராஜ் நடித்த பல காட்சிகளை உடனே நீக்க சொல்லி இயக்குனர்களுக்கு குடைச்சல் கொடுத்துள்ளார் வடிவேலு.
இதனால் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது, மேலும் தனக்கேற்றார் போல் கதைகளிலும் உள்ளே புகுந்து குழப்பம் செய்து படத்தையே நாசம் செய்து விட்டார் வடிவேல் என்றும் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் வடிவேலு தான் என கூறப்பட்டது. அதேபோன்று லைக்கா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு மற்றும் வடிவேலு இடையே மோதல் நடைபெற்று வந்துள்ளதாக தகவல் வெளியானது.
சந்திரமுகி 2 படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு காலை 9 மணிக்கு வடிவேலுவை வருவதற்கு தகவல் அனுப்பினால், அதற்கு 10 மணிக்கு வருகிறேன் என்கிறார் வடிவேலு, சரி சார் 10 மணிக்கு வாங்க என்றால் 11 மணிக்கு வருகிறேன் என்கிறாராம், சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்றது,சரி காலை 9 மணிக்கு வருகிறேன் என உறுதியளித்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வராமல் போன் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம் வடிவேலு என்கிற குற்றசாட்டுகலும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில் வடிவேலுவை வைத்து மிக சிரமத்துடன் படப்பிடிப்பை நடத்தி வந்த பி. வாசு தயாரிப்பு தரப்பிடம் முறையிட உடனே வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெருமளவு குறைத்து விடுங்கள் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்க அதன் படியே படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வாசு என கூறப்பட்டது, இந்நிலையில் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தில் அவருடைய நடிப்பு மிக பெரிய அளவில் பாராட்டும் படியாக இருந்தாலும், காமெடியனாக பார்த்த பலருக்கு வடிவேலு சீரியசாக நடிக்கும் காட்சிகள் மனதில் நிற்க வில்லை.
இந்நிலையில் தற்பொழுது வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் சந்திரமுகி படத்தை தான் வடிவேலுவின் சினிமா கேரியரை தீர்மானிக்கும் என்று எதிரிபார்க்க படுகிறது. சந்திரமுகி 2 படத்தில் நடித்தது குறித்து வடிவேலு சமீபத்தில் பேசுகையில்,என் மீது பொறாமை கொண்டவர்கள் இந்த படம் வெளிவந்த பின்னர் மேலும் வயித்தெறிச்சலாக இருக்கும் எனக் கூறினார் வடிவேலு.
வடிவேலுவின் இந்த பேட்டியை பார்த்த பலரும் இதே பில்டப்பை தான் நாய் சேகர் படத்திலும் வடிவேலு கொடுத்தார். ஆனால் அவருக்கு அப்படம் பெரிய வரவேற்பை தரவில்லை. மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதே போல் தற்போது வடிவேலு சந்திரமுகி 2 படத்திற்கு கொடுத்துள்ள பில்டப் என்றும், அந்த வகையில் சந்திரமுகி படத்தில் படப்பிடிப்பில் ஏற்க்கனவே வடிவேலு இயக்குனர் வாசு இடையில் நடந்து வந்த மோதல் காரணமாக வடிவேலுவின் காட்சிகள் மிக பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சந்திரமுகி 2 படத்தின் மூலம் தான் வடிவேலு சினிமா கேரியர் அடங்கியுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.