வடிவேலுவை நாக்கை புடுக்குற மாதிரி பேசிய ட்ரம்ஸ் சிவமணி…. அதுவும் பலர் முன்னிலையில்…

0
Follow on Google News

நடிகர் ராஜ்கிரனின் உதவியால் வடிவேலு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுக்கு கிடைக்கவில்லை. அதனால், கிடைத்த சிறு சிறு வேடங்களில்நடித்து வந்து வயிற்று பசியை போக்கி வந்த வடிவேலு, 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த வாய்ப்பை பெற்று கொடுத்தது விஜயகாந்த், மேலும் நம்ம ஊர் காரனாக இருக்கானே என்று அடுத்தடுத்து வடிவேலுக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று கொடுத்தார் விஜயகாந்த், ஒரு கட்டத்தில் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்தார் வடிவேலு. என்னதான் சினிமாவில் உச்சத்தை தொட்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவரது குணாதிசயங்கள் மூலம் பலரிடமும் வெறுப்பை தான் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இவருடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை நடிகர்களாக பணிபுரிந்த ஒருவர் கூட இவரைப் பற்றி நல்லவிதமாக சொன்னதில்லை. காரணம் வடிவேலுவால் சினிமாவில் துரோகம் இழைக்கப்பட்டவர் ஏராளம், துரோகத்தின் மொத்த உருவம் வடிவேலு என்றே கூட சொல்லும் அளவுக்கு வடிவேலுவின் இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜாகி உள்ளது.

வடிவேலு சினிமாவிற்கு வந்த புதுசில் போட்டுக்க சரியான துணி கூட இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். சின்ன கவுண்டர் படத்தில் கேப்டன் உடன் நடிக்கும் போது, வடிவேலு கஷ்டப்படுவதை பார்த்த கேப்டன், வடிவேலுவின் கையில் பணத்தைக் கொடுத்து நல்ல துணிகளை வாங்கி உடுத்திக்கோ என்று கூறி சாப்பாட்டுக்கும் காசு கொடுத்து இருக்கிறார். ஆனால், வடிவேலு அந்த நல்ல மனிதரின் உதவிக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் காட்டாமல் கேப்டன் விஜயகாந்தை பொது மேடையில் வாய்க்கு வந்தபடி எல்லாம் அவதூறாக பேசி அவமானப்படுத்தினார்.

இதனாலேயே என்னவோ சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவிலிருந்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்படி தனது அகம்பாவத்தால் பல வருடங்கள் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சிக்கித் தவித்த வடிவேலு சமீபத்தில் தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருந்தார். ஆனால் வடிவேலு சமீப காலமாக நடித்து வந்த படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

கேப்டனை அவதூறாக பேசிய காலத்திலிருந்து வடிவேலுவின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்போது கூட கேப்டனின் மரணத்திற்கு நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தவில்லை, இரங்கல் செய்தி தெரிவிக்கவில்லை என்பதால் வடிவேலுவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வடிவேலுவை வறுத்து எடுத்து வந்தனர்.

இதற்கிடையில், சென்னையில் நடந்த கலைஞர் 100 விழா திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறி கொண்டிருந்தனர், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து கார் பார்க்கிங் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு என்பதால், பேட்டரி கார் மூலம் சினிமா நடிகர், நடிகைகள் அமர வைத்து கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் வடிவேலுவை அழைத்து செல்வதற்காக வந்த பேட்டரி காரில், இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தனது குடும்பத்தினருடன் ஏறிக்கொண்டார். அதனை கவனித்த அங்கிருந்தவர்கள், இது வடிவேலுவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்று சொன்னார்கள். அதற்கு சிவமணி, ‘அவன்லாம் ஒரு ஆளா’ வேறு காரில் வர சொல்லுங்க என ஒரே போடாக போட்டு காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார்.

இதன் பின்பு அடுத்து வந்த காரில் வடிவேலு அனுப்பப்பட்டார், இப்படி பொது மக்கள் மத்தியில் வடிவேலு அசிங்கப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தாலும், வடிவேலுவுக்கு இது தேவைதான். தன்னை வளர்த்துவிட்டவர்களை அவமானப்படுத்தினால் இந்த மாதிரிதான் நடக்கும் இன்று பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.