பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி இப்படம் ஒரு மாதம் தள்ளிப்போய் வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடைசியாக சூர்யா சொந்த தயாரிப்பில் அவர் நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இந்த படத்தில் வன்னிய சமூகத்தை இழிவு செய்யும் விதத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தாக, பாமக மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை கண்டித்து நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டார் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ்.
அப்போதே நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்திருந்துக்கும். ஆனால் அவர் தான் செய்தது சரி தான் என்கிற தோரணையில் அன்புமணி ராமதாசுக்கு பதில் அறிக்கை வெளியிட்டார். இது பாமக மற்றும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் அனல் அரசு.
வெறும் 5 துப்பாக்கி ஏந்திய போலீசார் சூரியாவை காப்பாற்றிவிட முடியாது, பத்தாயிரம் வன்னிய மக்கள் சூர்யா வீட்டின் முன்பு திரண்டு வந்தால் சூர்யாவால் என்ன செய்ய முடியும்? இயக்குனர் ஞானவேலையும் காப்பாற்ற முடியாது என பகிரகமாக எச்சரிக்கை விடுத்தார் அனல் அரசு. மேலும் சூர்யாவை தாக்கினால் பரிசளிக்கப்படும் என பாமகவை சேர்ந்தவர்கள் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சமூகம் மற்றும் பாமகவினர் யார் என்பதை சரியான தருணத்தில் கற்று கொடுப்போம் என அப்போதே எதிர் தரப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக இருப்பதால், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா படம் வெளியான போது என்ன சம்பவம் நடந்ததோ அதே போன்ற சம்பவம் நடைபெறும் என பொது தளத்தில் சூர்யாவுக்கு எதிராக எச்சரித்து வருகின்றனர் பாமகவினர் மற்றும் வன்னியர்கள்.
மேலும் நடிகர் சூர்யா எங்களுக்கு விடுத்துள்ள சவாலாக நாங்கள் இதை கருதுகிறோம், எப்படி அவர் நடித்த படம் ஓடுது என பார்க்கிறோம், என ஜெய் பீம் விவாகரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் காத்திருக்கின்ற்றனர் வடமாவட்டத்தை சேர்ந்த வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாமகவினர் என்பது அவர்கள் பொது தளத்தில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உணர்த்துவதாகவே இருக்கிறது என்பது ககூறப்படுகிறது. இந்நிலையில் வாட மாவட்டத்தில் எதற்கு துணிந்தவன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.