இனி எப்படி சூர்யா நரம்பு புடைக்க அட்வைஸ் செய்வார்… இதை நீங்களும் உங்க மனைவியும் பின்பற்றுங்க சார்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா இதற்கு முன்பு புதிய கல்வி கொள்கை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும். புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை.

எங்கள் வீட்டில் மூன்று மொழிப் பேசுபவர்கள் உள்ளார்கள். இருந்தாலும் என் மகனுக்கு, என் மகளுக்கு மூன்றாவது மொழியைச் சொல்லிக் கொடுப்பது சவாலாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மூன்றாவது மொழியைத் திணித்தால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும்.

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை.

மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி என்ன நேரமில்லை, உடனடியாக ஏன் செய்தாகவேண்டும்? ஏன் இங்குள்ள அத்தனை பேரும் இதுகுறித்துப் பேசவில்லை? என புதிய கல்வி கொள்கை குறித்தும், மூன்று மொழிகள் மாணவர்கள் கற்று கொள்வது குறித்து நரம்பு புடைக்க இதற்கு முன்பு ஆக்ரோஷமாக பேசி இருந்தார் சூர்யா.

இந்நிலையில் தற்பொழுது மனைவி, குழந்தை என குடுமபத்துடன் மும்பையில் செட்டிலாகியுள்ள நடிகர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்க கதை கேட்டு வரும் ஜோதிகா. மேலும் கணவர் சூர்யாவுக்கு இந்தியும் கற்று கொடுத்து வருகிறாராம் ஜோதிகா.

அதே போன்று தங்களுடைய இரண்டு குழந்தைகளும் மும்பையில் படிக்க வைப்பதின் மூலம் பல மொழிகளை கற்று கொண்டு அவர்களின் எதிர்காலமும் மிகவும் சிறப்பாக அமையும் என்கிற நோக்கில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உலகம் தரம் வாய்த்த மிக பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள் சூர்யா – ஜோதிகா தம்பதியினர்.

இந்நிலையில் இந்தி சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக இந்தி கற்று கொள்ள ஆர்வம் காட்டும் சூர்யா, குழந்தைகள் எதிர்காலம் கருதி பல மொழிகளை கற்று கொள்ள உலகம் தரம் வாய்த்த பள்ளியில் படிக்க வைக்கும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர், ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் விருப்பப்பட்டு மூன்று மொழிகளை இலவசமாக படிக்க மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து பக்கம் பக்கமாக அறிக்கை விடும் நடிகர் சூர்யா.

மேலும் நரம்பு புடைக்க, புதிய கல்வி கொள்கை என்பது மாணவர்களுக்கு எதிரானது போன்று மேடையில் இதற்கு மும்பு பேசிய நடிகர் சூர்யா, அவருடைய குழந்தைகளை எதற்காக பல மொழி கற்று கொள்ளும் வகையில், உலக தரம் வாய்த்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது, சூர்யா மற்றும் ஜோதிகா இருவருடைய முக திரையை கிழிக்கும் வகையில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.