விஜய்யிடம் ஒப்பிட்டு தனக்கு தானே பில்டப் விடுகிறாரா சூர்யா? ஓரமா போய் விளையாடு சூர்யா…

0
Follow on Google News

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா என பெயரிட்டப்பட்டுள்ள திரைப்படதின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர் வரிசையில் அஜித்,விஜய், கமல், ரஜினி என உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் நடிகர் சூர்யாவின் சம்பளம் அவர்களின் சம்பளத்துக்கும் இடையிலான தூரம் மிக நீண்ட இடைவெளி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கங்குவா படத்தின் டைட்டில் வெளியானதை தொடர்ந்து விஜய் நடித்துவரும் லியோ படத்துடன் ஒப்பிட்டு சூர்யா தரப்பினர் ஓவர் பில்டப் கொடுத்து வருகிறார்கள்.மேலும் லியோ படத்திற்கு போட்டியாக கங்குவா படம் இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கம்பு சூத்தினாலும் கூட,.. அட.. ச்சி… அங்குட்டு ஓரமா போய் விளையாடு, என விஜய் ரசிகர்களும் பெரிதாக கண்டு கொல்லவில்லை.

விஜய் சுமார் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகர், மேலும் அவருக்கென ஒரு வியாபாரம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் விஜயுடன் சூர்யாவை ஒப்பிட முடியாத முடியவில்லை என்றாலும் கூட சூர்யாவுக்கு என்று ஒரு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய்க்கும் சூர்யாவிற்கும் ஏணி வெச்சாலும் எட்டாத தூரத்தில் இருவருக்கமான தொலைவு மிக தூரமாக இருக்கிறது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு காரணம் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் மற்றும் பல பேன் இந்தியா ஸ்டார்கள், சஞ்சய் தத் போன்றோர் இந்த படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளது. லியோ படத்தின் வசூல் என்பது ஆயிரம் கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சூர்யா நடித்து வரும் கங்குவார் படத்தின் தலைப்பு வெளியிடுவதற்கு மிக நீண்ட நாள் ஆனாலும் கூட அந்த படத்தின் தலைப்பு எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் இல்லை. பலருக்கு கங்குவார் என்றால் என்னவென்று தெரியவில்லை. இயக்குனர் தரப்பு கங்குவார் என்றால் நெருப்பு என தெரிவிக்கிறது. ஆனால் மற்றொரு தரப்பு கங்குவா என்பது விசாகப்பட்டினம் பக்கத்தில் இருக்கிற ஒரு கிராமம், அங்கு 16ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கிறார்கள் என்று ஒரு பக்கம் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூர்யாவிற்கான மார்க்கெட்டின் உயரம் எண்ணம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். விஜயிடம் ஒப்பிடும் அளவுக்கு அவர் இன்னும் வளர வேண்டும். ஏனென்றால் சூர்யா நடிப்பில் சுமார் கடந்த பத்து வருடங்களில் வெளியான எந்த ஒரு படங்களும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. ஜெய் பீம் மற்றும் சூரரைப் போன்று படங்கள் கூட ஓடிடி தளத்தில் தான் வெற்றி அடைந்தது. அதன் பின்பு வந்த எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் வெளியிட்டு படு தோல்வியை சந்தித்தது.

அந்த வகையில் ஜெய் பீம், சூரரைப் போற்றும் கூட திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்குமா? என்பது என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு நடிகரின் நடிப்பில் வெளியாகும் படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து அவர் நடிக்கும் படத்தின் வியாபாரமும் இருக்கும், அந்த வகையில் சூர்யா நடிப்பில் சுமார் கடந்த 10 வருடங்களில் இதுவரை திரையரங்குகளில் ஒரு படம் கூட வெற்றி பெறாத நிலையில், தற்பொழுது நடித்து வரும் கங்குவார் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்து வருகிறது சூர்யா தரப்பு.

மேலும் கங்குவார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா, இது சூர்யாவின் சொந்த படம் போன்றது தான், அதனாலே ஓவர் பிட்டப் கொடுத்து வருவதின் பின்னணியில், தற்பொழுது சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு இணையாக தான் சூர்யா சம்பளம் வாங்கி வருகிறார், அந்த வகையில் சூர்யா கங்குவார் படத்தின் கொடுக்கும் பில்டப் வெற்றி மூலம் அடுத்து தன்னுடைய படத்தின் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தலாம் என்கிற கனவில் உள்ளாராம் சூர்யா.

இந்நிலையில் சூர்யா நடித்துவரும் கங்குவார் படத்தின் டீசர், டிரைலர் வெளியான பின்பு தான் அந்தப் படம் மக்கள் மத்தியில் எந்த மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இந்த படம் தேருமா? தேராதா.? என்பது தெரியவரும். ஆனால் டீசர்ட் ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே சூர்யா தரப்பு இந்த படத்தை ஓவர் பில்டப் கொடுத்து வருவது, தண்ணிக்குள் இருக்கும் மீனை கரைக்கு சேர்பதற்குள் அந்த மீனின் பல்லு 10 கோடி போகும், அந்த மீனின் எலும்பு எட்டு கோடிக்கு போகும் என்று ஒவ்வொருவரும் பில்டப் கொடுப்பது போன்று உள்ளது.

அதிலும் லியோ படத்துடன் ஒப்பிட்டு சூர்யா படத்தை பில்டப் கொடுப்பது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது, முதலில் சிவகார்த்திகேயன் உடன் மோதி சூர்யா வெற்றி அடையட்டும் அதன் பின்பு விஜய் உடன் மோதுவதை பற்றி யோசிக்கலாம் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.