இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சுமார் 130 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் சினிமாவில் சம்பாரிக்கும் கோடிக்கனக்கான பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். நடிகர் விஜய்க்கு மேனேஜராக செயல்பட்டு வரும் ஜெகதீஷ், நடிகர் விஜயின் நிழலாகவே அவரை தொடர்ந்து வருகிறார் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் விஜய்யின் நம்பிக்கையை கூறியவராக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் லியோ படத்தில் தயாரிப்பாளர் லலித் என்றாலும் கூட இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஒருவகையில் லியோ படத்தின் தயாரிப்பில் பார்ட்னராக இருப்பதாக கூறப்படுகிறது. ஜெகதீஷ் ஒரு படத்தில் பார்ட்னராக இருக்கிறார் என்றால் பெருந்தொகையை ஜெகதீஷ் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை, நடிகர் விஜய் தான் அவருடைய பினாமியாக ஜெகதீஷ் மூலம் முதலீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் லியோ படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் என்பதால் நடிகர் விஜயின் சம்பளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கு பதிலாக தன்னுடைய மேனேஜர் ஜெகதீஸை பார்ட்னராக உள்ளே கொண்டு வந்திருப்பார் நடிகர் விஜய் என கூறப்படுகிறது. நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் ஒரு படத்தில் உள்ளே வருகிறார் என்றால் அது ஜெகதீஷ் வருவதாக அர்த்தமாகாது நடிகர் விஜய் அந்த படத்தின் பார்ட்னராக வருகிறார் என்பது தான் அர்த்தம்.
குறிப்பாக விஜய் மற்ற படங்களில் நடிப்பதற்கு காட்டு அக்கறையை விட லியோ படத்திற்கு அதிகம் அக்கறைப்பட்டு நேரம் செலவிடுகிறார். இதற்கு காரணம் இது தன்னுடைய சொந்த படம் என்பதால் தான் விஜய் அதிகம் அக்கைறையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் விஜய் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகும்பொழுது ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்.
அதே போன்று தொடர்ச்சியாக இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்.ஆனால் லியோ படத்தில் நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார், மேலும் ஒரே செட்டிலில் காஷ்மீரில் கடும் சிரமத்தை சந்தித்து படப்பிடிப்பை நடத்தி முடித்து வந்துள்ளார். இதற்கு காரணம் லியோ படம் தன்னுடைய சொந்த படம் என்பதால் தான் விஜய் இந்த அளவுக்கு மெனக்கெடுவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் எதற்காக தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷ்யை பினாமியாக இறக்கிவிட்டு ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என விசாரித்த போது பொதுவாக ஒரு நடிகர் சொந்தமாக படம் தயாரிக்கும் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும், குறிப்பாக சம்பந்தப்பட்ட நடிகருக்கு எதிராக உள்ளவர்கள், அந்த படத்திற்கு எதிராக பல பிரச்சனையை மறைமுகமாக தூண்டி விடலாம்.
குறிப்பாக நடிகர் சூர்யா நடித்து அவருடைய தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பெரும் சர்ச்சையாக வெடித்த போது, இதில் நான் நடிகன் மட்டும் தான், இந்த படத்தில் இயக்குனர் சொன்னதை மட்டும் தான் நடித்தேன் என சூர்யாவால் தப்பிக்க முடியவில்லை. காரணம் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளரும் சூர்யா என்பதால் அது அவருடைய சொந்த படம் என்று பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஒரு நடிகர் தயாரிப்பாளராக வெளியில் சொந்தமாக தயாரிக்கும் பொழுது அந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் ஏதாவது சர்ச்சையில் சிக்கினால், மேலும் அந்த நடிகரை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த நடிகருக்கு எதிராக பல சர்ச்சைகளை உருவாக்கக்கூடும், இது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காகவே தன்னுடைய பினாமியான மேனேஜர் ஜெகதீசன் மூலம் முதலீடு செய்து படங்களை தயாரித்து வருகிறார் விஜய் என கூறப்படுகிறது.