திரையரங்குகளில் வேட்டையாடப் போகும் மிருகா திரைப்படம்…

0
Follow on Google News

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில், அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் (மார்ச் 5, 2021) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது “மிருகா” திரைப்படம். அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், இயக்குனர் பாலாவுடன் இணைந்து ஆர்யா நடிப்பில் வெளிவந்த “நான் கடவுள்” என்ற திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தும், நடிகை ராய் லட்சுமியும் சவுகார்பேட்டை என்ற பேய் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அருள் தேவ் இசையில் மிருகா திரைப்படத்தை ஜாக்குவார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. காட்டில் வேட்டையாடும் மிருகத்தைப் போல கட்டிலில் வேட்டையாடி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லர் இன் த்ரில்லர் திரைப்படம் தான் இந்த “மிருகா”. இதனுள் பல சஸ்பென்ஸ் காட்சிகள் ஒளிந்துள்ளது.

பிப்.28ல் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது. நாளை வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் (Sneak Peek) இன்று வெளியிடப்பட்டுள்ளது