ஏப்.9ல் திரைக்கு வர இருக்கும் கர்ணன் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடு…

0
Follow on Google News

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள திரைப்படம் “கர்ணன்”. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தத் திரைப்படத்தை தாணு தயாரித்துள்ளார். கர்ணன் திரைப்படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகர் தனுஷுக்கு இது 41வது திரைப்படம். தனுஷ் நடித்து வரும் படங்கள் எல்லாமே வெற்றியை தான் கொண்டாடி வருகிறது ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியை சந்திக்கிறது.

பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்ட மாரி செல்வராஜ் இந்தக் கர்ணன் திரைப்படத்தையும் கச்சிதமாக இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் பாடல்கள் சில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடல் வரிகளும் படத்திற்கு ஏற்றாற்போல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கச்சிதமாக அமைந்துள்ளது.

தற்போது இந்தப் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கர்ணன் திரைப்படத்துக்கான டீசர் விரைவில் நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.