சூரிக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் வாய்ப்பு போச்சு… வெற்றிமாறன் வலையில் மீண்டும் சிக்கிய சூரி..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருந்த வடிவேலுவின் மார்க்கெட் 2011க்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த சூரியின் புரோட்டா காமெடி காட்சி மிக பெரிய ஹிட் அடித்து சூரியை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் அனைத்தும் சூரிக்கு கிடைக்க. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து குறிய காலத்தில் பிசி காமெடி நடிகர் ஆனார் சூரி. வருடத்திற்கு சுமார் 13 படங்களுக்கு மேல் நடித்து வந்த நடிகர் சூரி, ஒரு நாள் ஒரு நாள் கால்ஷீட் விதம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்க, மேலும் பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக உருவெடுத்ததை பார்த்து , நாமும் ஏன் ஹீரோவாக நடிக்க கூடாது என வெற்றிமாறன் இயக்கும் விடுதலைப் படத்தில் கமிட் ஆனார் சூரி. இந்தப் படத்தில் முதலில் சூரி கதாநாயகனாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்த நிலையில், அதன் பின்பு இந்த படத்தின் உள்ளே விஜய் சேதுபதியை கொண்டு வந்தார் வெற்றிமாறன்.

ஆனால் சூரியனை விட விஜய் சேதுபதியை வைத்து அதிக நாட்கள் படப்பிடிப்பு எடுத்து சூரி நடித்த பல காட்சிகளை இந்த படத்தில் இருந்து நீக்கியுள்ளார் வெற்றிமாறன். இதனால் இந்த படம் சூரியின் படம் அல்ல விஜய் சேதுபதியின் படம் என்கின்ற அளவுக்கு பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலை படத்தில் கமிட் ஆன பின்பு தனக்கு வந்த காமெடி படங்களில் நடிக்க கால் சீட் கொடுக்க முடியாத சூழல் சூரிக்கு ஏற்பட்டது.

சூரியின் பட வாய்ப்புகளை யோகி பாபு தட்டிச் சென்றார், தற்பொழுது யோகி பாபு டாப் ஒன் காமெடி நடிகராக இருக்கிறார். இதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் ஆகியும் விடுதலைப் படம் வெளியாகவில்லை இதனால் சூரியன் பல காமெடி பட வாய்ப்புகளை இழந்தது தான் மிச்சம். இதனை தொடர்ந்து மீண்டும் காமெடியனாக நடிக்க சூரி வாய்ப்பு தேடி வரும் நிலையில்.

அவருக்கான பட வாய்ப்பு அவர் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஹீரோவுக்கு ஆசைப்பட்டு காமெடி வாய்ப்பையும் இழந்த பரிதாபத்தில் இருக்கும் சூரியிடம் மீண்டும் 30 நாள் கால்ஷீட் கேட்டு விடுதலை படத்தில் நடிக்க வெற்றிமாறன் கேட்டுள்ளார். ஆனால் சூரி கோபத்தில் நீங்கள் என்னை ஹீரோ என்று ஆசை காட்டி பின் விஜய் சேதுபதி இந்த படத்தில் என்னைவிட அதிக காட்சிகள் வரும்படி செய்துள்ளீர்கள் என தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கு வெற்றிமாறன் இந்த படத்தில் நீங்கள்தான் ஹீரோ, உங்கள் பெயர்தான் படத்தில் முதலாவதாக வரும் அடித்து விஜய் சேதுபதி பெயர் இடம்பெறும் என வெற்றிமாறன் தெரிவித்து. அதற்கான போஸ்டரையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் வெற்றிமாறனுக்கு 30 நாள் கால் சீட் கொடுத்து விடுதலை படத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் விரித்த வலையில் மீண்டும் சிக்கியுள்ள சூரி தற்பொழுது வந்து கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்சம் காமெடி சினிமா வாய்ப்புகளையும், எதிர்காலத்தில் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றது சினிமா வட்டாரங்கள்.

சமந்தாவால் சிறைக்கு செல்லும் லிங்குசாமி… சமந்தா வலையில் லிங்குசாமி சிக்கியது எப்படி தெரியுமா.?