மகனுக்காக பத்து பைசா கூட வெளியேற்றாத சிவகுமார்… அமீருக்கு நடந்த துயர சம்பவம்…

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நடிகர் கார்த்திக், இனி டைரக்‌ஷன் எல்லாம் சரிப்படாது என முடிவெடுத்து அண்ணன் சூர்யா மாதிரி நடிகராகும் முயற்சியில் இறங்கினார், ஆனால் நடிகர் விஜய்க்கு அவருடைய தந்தை SA சந்திரசேகர் எப்படி சொந்த காசை போட்டு தயாரித்து மகன் விஜயை ஹீரோவாக நடிக்க வைத்தாரோ, அது போன்று தன்னுடைய மகன்களை சொந்தமாக தயாரித்து ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபடும் எண்ணம் சிவகுமாருக்கு கிடையாது.

அந்த வகையில் நடிகர் சூர்யா நடிகராக உருவானது கூட பிறர் தயாரித்த படங்களில் மூலம் தான், அந்த வகையில் கார்த்திக் ஹீரோவா முடிவு செய்த போது. சிவகுமார் குடும்ப உறுப்பினர் ஞானவேல் ராஜா சினிமா தயாரிக்கும் ஆசையில் இருக்கிறார், உடனே என்னுடைய பையன் கார்த்தியை ஹீரோவாக்கி நீ ப்ரொட்யூசர் ஆயிடு’ என சிவகுமார் தயாரிப்பாளராக களம் இறங்க ஞானவேல் ராஜாவுக்கு சிக்னல் கொடுக்கிறார்.

அந்த காலகட்டத்தில் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ராம் படம் மிக பெரிய ஹிட் அடித்து, இயக்குனர் அமீருக்கு இயக்குனருக்கான அந்தஸ்தை பெற்று தருகிறது. நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் பார்வை அமீர் பக்கம் திரும்புகிறது. உடனே அமீரை நேரில் அழைத்து கதை கேட்கிறது சிவகுமார் தரப்பு, இதன் பின்பு அமீர் இயக்கத்தில் , ஞானவேல் ராஜா தயாரிப்பில் பருத்தி வீரன் படத்தில் கார்த்திக் அறிமுகம் ஆகிறார்.

இதில் ஞானவேல் ராஜாவுக்கு ப்ரொடக்‌ஷன் தெரியாது. ஆனால் அமீருக்கோ ஏற்கனவே தான் இயக்கிய ராம் படத்தை சொந்த ப்ரொடக்‌ஷன் செய்த அனுபவம் உண்டு. இந்நிலையில் 2.85 கோடிக்கு ஃபர்ஸ்ட் காப்பி எடுத்து கொடுக்க அமீரிடம் பேசி முடிக்க படுகிறது, அதாவது ஞானவேல் இத்தொகையை அமீரிடம் தந்துவிடவேண்டும், திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடித்து, முதல் காப்பியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் அமீர் தந்துவிடவேண்டும் என பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹீரோ புதுசு, சம்பளம் பெரிதாய் இருந்திருக்காது. நம்மூர் மதுரை, தேனிப்பக்கம் போய் படத்தை எடுத்து லாபம் பார்த்துவிடலாம் என அமீர் கிளம்புகிறார். ஆனால் படம் வேகமாய் நகரவில்லை, செலவும் எகிறுகிறது. ஒரு கட்டத்தில் என்கிட்ட இதுக்கு மேல காசில்ல, நீங்களே டேக் ஓவர் பண்ணிக்குங்க’ என அமீரிடம் சண்டை போட்டு கையை விரிக்கிறார் ஞானவேல் ராஜா.

சிவகுமாரும் தன் கையை விட்டு பத்துபைசா கூட வெளியாக்க கூடியவர்கள் கிடையாது. இப்படி ஒரு சூழலில், தன் படத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், அமீர் நண்பர்கள் மற்றும் சசிகுமார், சமுத்திரக்கனி உதவியில் பணம் புரட்டி படத்தை எப்படியோ முடித்துவிடுகிறார் அமீர். படம் மிக சிறப்பாக வந்துள்ளதை பார்த்த ஞானவேல் ‘நான் தானே ஒரிஜினல் தயாரிப்பாளர், நானே டேக் ஓவர் பண்ணிக்கிறேன், இந்தா பேசின காசு 2.85 கோடி என முன்வருகிறார்.

ஆனால் அமீர் இதுவரை 5 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்க. இதை ஞானவேல் ராஜாவும் சிவகுமார் குடும்பமும் எதிர்பார்க்கவே இல்லை, உடனே செலவு செய்த கணக்கை கேக்குறார்கள். ஆனால் அமீர் காட்டிய கணக்கில் உடன் படமால் இரண்டு தரப்புக்கு சண்டை சச்சரவுகள் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் 4.85 கோடி அளவுக்கு செட்டில் செய்து படத்தை டேக் ஓவர் செய்கிறது ஞானவேல் ராஜா தரப்பு.

பருத்தி வீரன் ரிலீசாகி மிக பெரிய ஹிட் அடித்து வசூலை குவிக்கிறது.ஆனால் அமீர் தனக்கு சேர வேண்டிய பணம் சேரவில்லை என நீதிமன்றம் செல்கிறார். இந்த வழக்கு 17 வருடமாய் நடந்துகொண்டு இருக்கிறது. பண விஷயத்தில் மிகவும் ஒழுங்கமைக்கப்படாதது என்பதால் சினிமா துறையில் இதற்கெல்லாம் தீர்வில்லை. கோர்ட்டும் ஒன்றும் செய்து விடமுடியாது. ’நீ திருடன் நீ தான் திருடன்’ என வார்த்தையை அதிகம் விடவிட பிரச்சனை பெரிதாக தான் செல்லும்.

மேலும் அமீருக்கு ஆதரவாக சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கோங்குரா என வரிசையாய் உள்ளே இறங்குவார்கள் என ஞானவேல் தரப்பு எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் சிவகுமார் தன்னுடைய குடும்பத்தில் இரு பெரும் ஹீரோக்களை வைத்துக்கொண்டு இந்த பிரச்சனை தொடர்ந்தால் டேமேஜ் சிவகுமார் குடும்பத்துக்கு தான் என்பதை உணர்ந்து சிவகுமார் குடும்பத்தினர் தான் முன்வந்து இதை பேசித் தீர்க்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.