இயக்குனர் அமீரின் நண்பரும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்ததை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டு பிடித்துள்ளார்கள். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த போதை பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட கடத்தல் மாஃபியா மன்னன் ஜாபர் சாதிக்யை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது NCB.
இதனை தொடர்ந்து மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் மாபியா மன்னன் ஜாபர் சாதிக் உடன் அமீருக்கு என்ன தொடர்பு.? அமீரை NIA கைது செய்து விசாரிக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வந்த நிலையில் எனக்கும் ஜாபர் சாதிக் நண்பர் ஆனால் அவர் பின்னணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என அமீர் கொடுத்த விளக்கத்தை பெருமைப்பாலும் யாரும் ஏற்று கொள்ளவில்லை.
அது எப்படி, ஜாபர் சாதிக்கை சினிமாவுக்கு அழைத்து வந்ததே அமீர் தான், அவர் தான் பல இடங்களில் தன்னுடைய நண்பர் என ஜாபர் சாதிக்கை அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் பத்து வருடமாக நண்பராக இருக்கும் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் பற்றி அமீருக்கு எதுவுமே தெரியாது என்றால் நம்புபடியாகவா இருக்கு என தொடர்ந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தார் அமீர்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன், ராம் ஆகிய இரண்டு படங்கள் தவிர்த்து அவர் இயக்கிய அணைத்து படமும் தோல்வியை தான் தழுவியது. அந்த வகையில் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போன அமீர் நடிகராக அவதாரம் எடுத்து வட சென்னை மூலம் மீண்டும் சினிமாவில் தன்னுடைய இருப்பை தக்க வைத்து கொண்டார், இதனை தொடர்ந்து கடத்தல் மன்னன் நபர் ஜாபர் சாதிக் தயாரிப்பில் இறைவன் மிக பெரியவன் என்கிற படத்தை தயாரித்து வந்தார் அமீர்.
அமீர் இயக்கிவரும் மாயவலை படத்திற்கு போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பண உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சினிமாவில் மட்டுமின்றி நண்பர் ஜாபர் சாதிக் துணையுடன் பல்வேறு காபி ஷாப்களை திறந்து சினிமா – தொழில் என பரபரப்பாக அமீர் இயங்கி வந்த நிலையில், ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அமீர் இயக்கிய படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஆனால் தான் இயக்கிய படம் ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? எதுவுமே தெரியாது என, நான் ஒரு பச்சை குழந்தை என்பது போன்ற ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தார் அமீர். இப்படி அமீர் சுற்றி பல பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ஞானவேல் ராஜாவின் அப்பா வி.கே. ஈஸ்வரன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனைக்குள்ளான வி.கே. ஈஸ்வரன், அமீர் மீது மான நஷ்ட வழக்கை தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஞானவேல் ராஜா “தன் மீதும் தன் தந்தை மீதும் அவதூறு கருத்தைப் பரப்பியதற்காக 10 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்குடன் அமீர் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர் மற்றும் சிவகுமார் குடும்பத்தினருக்கும் இடையில் நடந்து வந்த பிரச்சனனையில் அமீருக்கு ஆதரவாக பல சினிமா துறையினர் குரல் கொடுக்க, உடனே ஞானவேல் ராஜாவை சற்று அடக்கி வைத்து சிவகுமார் குடும்பம், தற்பொழுது ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமீர் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், இது தான் சரியான தருணம் என உறவினர் ஞானவேல் ராஜா மூலம் அமீர் மீது மனநஷ்டம் வழக்கு பதிய வைத்துள்ளது சிவகுமார் குடும்பம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.