விஜயகாந்த் கஷ்டப்பட்டு உருவாக்கியதை சல்லி சல்லியாக உடைத்த சிவகுமார் குடும்பம்…

0
Follow on Google News

தென்னிந்திய நடிகர் சங்கம் எம்ஜிஆர், சிவாஜி, கலைவாணர் ஆகியோரால் தொடங்கப்பட்டு அடுத்தடுத்து தொடர்ந்து நடத்துவதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தது, இதனால் நடிகர் சங்கம் ஒரு கட்டத்தில் கடனில் மூழ்க, தமிழ் திரை துறையினரும் யாரும் கண்டு கொள்வதில்லை, குறிப்பாக சினிமாவில் நடிக்கும் டாப் நடிகர் நடிகைகள் பலரும் கூட நடிகர் சங்க உறுப்பினராக இணையாமல் கூட சினிமாவில் நடித்து வந்த காலம் அது.

அந்த அளவுக்கு நடிகர் சங்கம் மிக பரிதாபத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில், நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று, பல சீர்திருத்தங்களை நடிகர் சங்கத்தில் கொண்டு வந்த விஜயகாந்த், யாருமே யோசித்து கூட பார்க்க முடியாதபடி, அணைத்து நடிகர் நடிகைகளையும் ஒன்றிணைந்து கலைநிகழ்ச்சியை நடத்தி நடிகர் சங்க கடனை அடைந்து, வங்கியில் அடமானத்தில் இருந்த நடிகர் சங்க பாத்திரத்தை மீட்டு எடுத்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் நடிகர் சங்க கடனை அடைந்தது மட்டுமில்லாமல், நடிகர் சங்க உறுப்பினராக இருக்கும் துணை நடிகர் அனைவர்க்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும் வகையில் பல தீர்மானகளை கொண்டு வந்து, அழிவின் விளிம்பில் இருந்த நடிகர் சங்கத்துக்கு உயிர் கொடுத்த விஜயகாந்த், அதன் மூலம் தமிழ் சினிமாத்துறையை வாழவைத்து விட்டு, நடிகர் சரத்குமார் கையில் நடிகர் சங்கத்தை ஒப்படைத்து விட்டு சென்றார்.

எப்படி விஜயகாந்த் தலைவராக இருக்கும் போது அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து நடிகர் சங்கத்தை வழிநடத்தினரோ, அதே போன்று விஜயகாந்தை பின்பற்றி நடிகர் சங்கத்தை வழி நடத்தினார் சரத்குமார். இப்படி ஒரு சூழலில் தான் நடிகர் சங்கத்தில் விஷால் மூலம் பிரச்சனை உருவாக, அதன் பின்னணியில் சிவகுமார் குடும்பம் அவர்களின் குடும்ப வாரிசான கார்த்தியை உள்ளே இறக்கிவிட்டு நடிகர் சங்கத்தை கைப்பற்றியது.

நடிகர் தலைமை பொறுப்பில் நாசர், விஷால் இருந்தாலும் கூட நடிகர் சங்கத்தில் சிவகுமார் குடும்பதின் ஆதிக்கம் அதிகம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒற்றுமையாக இருந்த நடிகர் சங்கம் தற்பொழுது சுக்குநூறாக உடைந்து, ஒரு மாமனிதன், தமிழ் சினிமாவை வாழ வைத்த கேப்டன் விஜயகாந்த் இறுதி சடங்குக்கு கூட நடிகர், நடிகைகளை ஒருங்கிணைத்து ஊரவலமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு உள்ளது இன்றைய நடிகர் சங்கம்.

இதில் உக்கட்டம் கொடுமை என்னவென்றால் தலைமை பொறுப்பில் இருக்க கூடிய விஷால், கார்த்திக் கூட விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை, விஜயகாந்த் உடலுக்கு இரண்டு முறை நேரில் வந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்திய நிலையில், தங்களை கலை குடும்பம் என தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் சிவகுமார் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட சக கலைஞன் விஜயகாந்த் மரணத்தில் பங்கேற்க வில்லை.

மேலும், நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற விஜயகாந்துக்கான இரங்கல் கூட்டத்தை கூட சரியாக நடத்தாமல் மக்கள் கோபத்துக்கு உள்ளானது நடிகர் சங்கம். இந்த நிலையில் தன்னுடைய கடுமையான முயற்சியினால் நடிகர் சங்க கடனை அடைந்து வங்கியில் இருந்து பாத்திரத்தை மீட்டு எடுத்த விஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீனா போச்சே என்று சொல்லும் அளவுக்கு, தற்பொழுது நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட வங்கியில் கடன் வாங்க இருக்கிறது நடிகர் சங்கம்.

அந்த வகையில் கடனில் இருந்து விஜயகாந்த் மீட்டெடுத்த நடிகர் சங்கத்தை மீண்டும் வங்கியில் அடமானம் வைக்க இருக்கும் நிலையில், நன்றாக சென்று கொண்டிருந்த நடிகர் சங்கத்தை விஷால், நாசர் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினரான கார்த்திக் மூலம் நடிகர் சங்கத்தை கைப்பற்றி நாசம் செய்து விட்டது சிவகுமார் குடும்பம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.