கமல்ஹாசன் மீது சிவகார்த்திகேயனுக்கு இருந்த தீராத பகை… அதுக்காக கை நீட்டி அடிக்கலாமா.?

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் ஒரு முறை விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை தொகுப்பாளர் ஒரு பாடல் சொல்ல பாட கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு ஸ்ருதி வராது என்பது போல கூறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் நீங்கள் கூப்பிட்டால் சுருதி வராமலா இருக்கும் என்பதுபோல கமெண்ட் அடித்துள்ளனர். அந்த வீடியோ பகுதி மட்டும் கமலின் தலையீட்டால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் இது செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது. அதேபோல வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஒரு காட்சியில், ‘திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் வைக்கவில்லை என்றால் நான் இந்த நாட்டை விட்டுச் செல்வது தவிர எனக்கு வேற வழி இல்லை’ என்பதுபோல டயலாக் பேசுவார் சிவகார்த்திகேயன்.

அதாவது விஸ்வரூபம் பட பிரச்சினை வந்தபோது கமல்ஹாசன், தான் இந்த நாட்டை விட்டு செல்வதாக அறிவித்தார். அதனை ஒப்பிட்டு சிவகார்த்திகேயன் கமலை கிண்டலாக பேசியது கமல் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி அடுத்த சில மாதங்களில், தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சினிமா துறையை சேர்ந்த பல நட்சத்திரங்கள் மதுரை விமானம் நிலையம் வந்து அங்கிருந்து காரில் திருச்சந்தூர் சென்றார்கள்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்தார், அப்போது கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு பெரும்பாலோனோர் குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, ஸ்ருதிஹாசனை தரக்குறைவாக பேசியதாகவும், மேலும் எங்க தலைவர் கமல்ஹாசனை இந்த நாட்டை விட்டு செல்வதாக படத்தில் வசனம் பேசி கிண்டல் செய்ததாக சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் விரட்டி சென்றதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சிவகார்த்திகேயனை பாதுகாப்புக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இதில் கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும் அன்று ஒரே விமானத்தில், ஒரே நிகழ்ச்சிக்கு தான் வந்து இறங்கினார். கமலஹாசன் சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவகார்த்திகேயன் வெளியே வந்த போது, அங்கிருந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர்களின், இந்த செயலுக்கு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, இதனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமல் மீது தொடர்ந்து வருத்தம் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே கமலஹாசனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் முரண்பாடு இருந்த நிலையில் எப்படி சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் படத்தில் கமிட்டாகி இருப்பார் என்கிற குழப்பம் நீடித்து வந்தது. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் சினிமாவில் வியாபார தந்திரம் கொண்டவர் என்றும். தற்போது நடிப்பதை விட படங்கள் அதிகம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வரும் கமலஹாசன்.

இன்றைக்கு ஓடுகின்ற குதிரையாக இருக்கும் சிவகார்த்திகேயனை தன்னுடைய கம்பெனியில் கமிட் செய்வதற்காக ஏற்கனவே நடந்த மதுரை சம்பவங்களுக்காக, மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாதீங்க என்று தன்னுடைய வருத்தத்தை கமலஹாசன் நிச்சயம் சிவகார்திகேயனிடம் தெரிவித்து இருந்திருப்பார் என்றும், அதனால் தான் கமலஹாசன் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்சில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது.