நடிகர் சிவகார்த்திகேயன் தொலைகாட்சியில் ஸ்டான் அப் காமெடியனாக பிரபலமானவர், தொலைகாட்சியில் தொகுப்பாளராக அவர் தொகுத்து வழங்கிய காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி என்பதற்காகவே, அந்த நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் உச்சத்தில் இருக்கும், அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. தொலைக்காட்சி தொகுப்பாளர் யாருக்கும் இல்லாத ரசிகர் அவருக்கு இருந்தது, அதே மாஸோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிகர் சந்தானம் போன்று ஹீரோவுக்கு நண்பராக, அல்லது காமெடி நடிகராக நுழைந்து இருந்திருந்தால் காமெடியனாகவே தமிழ் சினிமா அவருக்கு முத்திரை குத்தியிருக்கும், ஆனால் அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த முதல் படமே ஹீரோ வேஷம் தான், சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆரம்ப கட்டத்திலே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை தொட்டார் சிவகார்த்திகேயன்.
முன்னணி நடிகராக இருந்த சிவகார்த்திகேயன், பேராசையின் காரணமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அவர் தயாரிப்பில் வெளியான அடுத்தடுத்து படங்கள் மிக பெரிய தோல்வியை தழுவியது, இதனால் பெரும் கடன் சுமைக்கு உள்ளான சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியமால் தத்தளித்து உள்ளார். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல், தன்னுடைய வீடு உட்பட சில சொத்துக்களை விலை பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் வாங்கிய சொத்துக்களை விற்க மனமில்லாமல் கதறி அழுதுள்ளார்கள் சிவகார்திகேயன் குடும்பத்தினர். வாங்கிய கடனை அடைக்க படத்தில் நடித்தால் மட்டும் வரும் சம்பளத்தை வைத்து விரைவில் அடைத்து விட முடியாது, அதற்குள் வட்டி மேல் வட்டி கூடும், ஏற்கனவே கடனில் இருப்பதால் மீண்டும் படம் தயாரித்து அதுவும் தோல்வியை தழுவினால் பெரிய சிக்கலில் மாட்டி கொள்வோம், குடும்பத்தினர் சொத்துக்களை விற்க மனம் இல்லாமல் கதறி அழுகின்றனர்.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சிவகார்த்திகேயன் இருந்த பொது. அவருடைய தயாரிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் படம் வெற்றியை பெற்று சிவகார்த்திகேயனுக்கு வசூலை குவித்தது, இருந்தும் அவர் ஒரு அளவு தான் அந்த பணத்தில் கடனை அடைந்துள்ளார். இதன் பின்பு டாக்டர் படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை வைத்து, தற்பொழுது அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் டான் படத்தை ப்ரீ – ப்ரொடக்ஷன் செய்கிறார்.
அதாவது அந்த படத்தை 40 கோடிக்கும் எடுத்து கொடுக்க லைக்கா நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்துள்ளது, அவருடைய சம்பளம் 20 கோடி போக மீதம் 15 கோடிக்குள் டான் படத்தை எடுத்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன், இதில் அவருக்கும் 5 கோடி லாபம் கிடைத்துள்ளது, மேலும் முன்னணி நடிகர் போன்று ஏரியா வாரியாக கமிஷன் சிவகார்த்திகேயன் கேட்டுள்ளதாகவும் அதில் குறைந்தது 20 கோடி வரை வரும் என கூறப்படுகிறது.
ஆக, சிவகார்த்திகேயன் ஒரே படத்தில் அவருடைய சம்பளம் உட்பட சுமார் 45 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுவதால், இதே பார்முலாவை அடுத்த படங்களிலும் பின்பற்றினால், மொத்த கடனையும் சிவகார்த்திகேயன் அடைத்து விடுவார் என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது, அதே வேலையில், ஒரே படத்தில் பல கோடி சம்பாரிக்கும் சிவகார்த்திகேயன் தந்திரத்தை பார்த்து பல சினிமா முன்னனி நடிகர்கள் பொறாமையில் இருப்பதாக கூறப்படுகிறது.