ஷங்கர் மனைவியை அழைத்து சென்று அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் விருமன். இந்த படத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றுள்ளார் அதிதி சங்கர். மருத்துவம் படித்து முடித்த அதிதி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு முறையான நடனம், பாடல், நடிப்பு என அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து சினிமாவில் அறிமுகமாகமானார்.

ஒரு நடிகையின் முதல் படம் வெளியாகி, அந்த படத்தில் நடித்த அந்த நடிகைக்கு வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து தான், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும், அதே போன்று முந்தைய படத்தின் வரவேற்பை பொறுத்து அவருடைய சம்பளமும் உயர்த்தப்படும். ஆனால் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தில் அதிக சம்பளத்தில் அதிதி சங்கர் ஒப்பந்தமானதின் பின்னனியில் அவருடைய தந்தையின் செல்வாக்கு தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் அணைத்து வேலைகளும் முடிந்து விரைவில் திரைக்கு வர இருப்பதால், அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள் அந்த படத்தில் நடித்த நடிகர் சிவகார்திகேயன் , நடிகை அதிதி சங்கர் ஆகியோர். தமிழ் தெலுங்கு என ரிலீஸாக இருக்கும் மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு மலேசியா, துபாய் நாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகார்திகேயன் ஏற்பாடு செய்துள்ளார், அந்த வகையில் பொதுவாக அந்தந்த நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய உரிமம் பெற்றுள்ளவர்கள் தான் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை, அந்தந்த நாடுகளில் ஏற்பாடு செய்வார்கள், மேலும் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கான செலவை படத்தில் வசூலாகும் தொகையில் படத்தின் உரிமம் பெற்றவர்கள் கழித்து கொள்வார்கள்.

இந்நிலையில் மலேசியாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒரு தொகையை அங்கே படத்தை ரிலீஸ் உரிமம் பெற்றவர்கள் சிவகார்த்திகேயனிடம் தெரிவிக்க, அதற்கு இந்த தொகை அதிகமாக இருக்கிறது என, வேறு ஒருவர் மூலம் குறைந்து விலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் லோ பட்ஜெட் ப்ரோமோஷன் நிகழ்ச்சி என்பதால் பல குளறுபடிகளை செய்துள்ளார்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், அதில் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை அதிதி சங்கர் மற்றும் அவருடன் அவருடைய தாய் சென்றுள்ளார், இதில் சென்னையில் இருந்து மலேஷியா செல்ல அதிதி சங்கருக்கு விமான டிக்கெட் பிஸினெஸ் கிளாஸ் புக் செய்யப்டடுள்ளது, ஆனால் இயக்குனர் சங்கர் மனைவிக்கு எகனாமிக் கிளாஸ் புக் செய்யப்பட்டுள்ளது.

இருந்தும் புக் செய்த டிக்கெட்டில் பயணித்து மலேஷியா சென்ற அவர்களுக்கு பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் தங்கும் ஓட்டலில் புக் செய்யாமல் சாதாரண ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி பல குளறுபடி நடந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறாமல் வெறும் பிரெஸ் மீட் உடன் திரும்பியுள்ளது ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற மாவீரன் படக்குழுவினர்.

இந்நிலையில் அதிதி ஷங்கர் அம்மாவுக்கு எகானாமிக் கிளாசில் டிக்கெட் புக் செய்தது தொடர்ந்து பல குளறுபடிக்கு சிவகார்த்திகேயன் விளக்கம் கேட்டதற்கு, லோ பட்ஜெட்டில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் எங்களால் என்ன செய்ய முடியும், எங்க கையில் இருந்தா பணத்தை கூடுதலாக செலவு செய்ய முடியும் என கூலாக தெரிவித்துவிட்டார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அந்த வகையில் லோ பட்ஜெட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மனைவிக்கு எகனாமிக் வகுப்பில் டிக்கெட் புக் செய்து அவரை இன்சல்ட் செய்வது போன்று நடக்க காரணமாக இருந்துள்ளார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.