நம்ப வைத்து ஏமாற்றிய சிம்பு… இனி யாரு தான் சிம்புக்கு உதவி செய்வார்கள்…

0
Follow on Google News

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி ஃபீல்ட்அவுட்டாகி வந்த சிம்பு, மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் வேற லெவலில் சம்பவம் செய்து வருகிறார். ஆனால் மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்தாலும், மாநாடு வெற்றியை வைத்து பில்டப் கொடுத்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் விடாது சிம்புவை சர்ச்சைகள் தொடர்ந்து துரத்தி கொண்டே தான் உள்ளன. சிம்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இதற்காக இந்த படத்திற்கான முழு ஏற்பாடுகளும் செய்த பின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

ஆனால் சிம்பு மாநாடு படத்திற்குப் பின்பும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதன்பின் ஐசரி கணேசன் சிம்புவை அடுத்த படத்தில் நடிக்க விடவே மாட்டேன் என பெரிய பிரச்சனையைக் கிளப்பினார். இருப்பினும் சிம்பு அடுத்ததாக கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டானார். ஐசரி கணேசனுக்கு கமல் அண்ணன் மாதிரி அப்படி இருக்கும்போது அவர் தயாரிக்கும் படத்தில் பிரச்சனை பண்ண போவதில்லை என்று பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இதனால் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால் அது இன்னும் முடியவில்லை, தோண்ட தோண்ட கிளம்பி கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை முடிந்து விட்டது கமல் படத்திற்கு பிறகு சிம்பு நிச்சயம் தன்னுடைய படத்தில் நடிப்பார் என்று சமீபத்திய பேட்டியில் ஐசரி கணேஷ் வெளிப்படையாக பேசி பச்சைக்கொடி காட்டினார்.

ஆனால் இப்பொழுது ஐசரி கணேஷ் சிம்பு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் தான் அவரை விடுவோம் என்று நீதிமன்றம் சென்று விட்டார். சிம்பு தரப்பும் நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சந்திக்கலாம் என விடாப்பிடியாய் நிற்கிறது என கூறப்படுகிறது. தற்போது மொரிசியஸில் டூரில் இருக்கிறார் நடிகர் சிம்பு.

நடிகர் சங்கத்துக்கு சென்று இருந்தால் கூட இந்த பிரச்னை சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் கோர்ட் சென்றதால் இந்த பிரச்னை பல வருடம் இழுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதை போன்று ஐசரி கணேஷ் 4 கோடி கொடுத்தேன் எனக் கூறினாலும் அவரிடம் சிம்புவிடம் ஒரு கோடி கொடுத்ததற்கே சான்று இருக்கிறது. இதனால் கோர்ட்டில் டெபாசிட்டாக ஒரு கோடி கட்ட சொல்ல அவர் தரப்பும் கட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனால் சீக்கிரத்தில் முடிய வேண்டிய பிரச்னை தற்போது கோர்ட் வரை சென்று இருப்பதால் சிம்பு தரப்புக்கு உண்மையிலேயே 3 கோடி வரை லாபம் தான். மேலும், சிம்பு தரப்பும் கொஞ்சம் இறங்கி வந்து இந்த பிரச்னையை முடிப்பதே அவரின் கேரியருக்கு சரியாக அமையும் என்றும் சிலர் கிசுகிசுக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்கும் மறுபக்கம் நடிகர் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் விதிக்கப்பட்ட ரெட் கார்டு காரணமாக நடிகர் சிம்பு பல மாதங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தார். இந்நிலையில் அவர் மீது பல புகார்கள் இருப்பதால் மீண்டும் ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.