எனக்கு அந்த நடிகை தான் வேண்டும்… அடம் பிடிக்கும் சிம்பு… ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம்..

0
Follow on Google News

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால், ஈஸ்வரன் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளார்கள், ஈஸ்வரன் படப்பிடிப்பு முடிந்த பின்பும் கூட, சிம்பு – நிதி அகர்வால் இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வருவதாக கிசு கிசுக்கள் வெளியானது.

இந்த கிசு கிசு குறித்து ஏற்கனவே நிதி அகர்வாலிடம் கேள்வி எழுப்பிய போது, மழுப்பலாக பதில் சொல்லி நழுவி சென்றார். இந்த நிலையில் தற்பொழுது நடிகர் சிம்பு தற்பொழுது லண்டனில் உள்ளார், ஆனால் அவருடன் நடிகை நிதி அகர்வாலும் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் சிம்பு தற்பொழுது அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு காரணமே நடிகை நிதி அகர்வாலுடன் இருப்பதற்க்காக தான் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு தாய்லாந்தில் தனி தீவில் சில நாட்கள் தங்கி இருந்தார் சிம்பு. அங்கே அடுத்து சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சியை கற்றுக் கொண்டு வருகிறார் சிம்பு என, அவர் தரப்பினர் ஒரு பக்கம் கிளப்பி விட்டாலும், அடுத்தடுத்து சில நாட்களில் தாய்லாந்தில் சிம்பு யாருடன் என்ன செய்கிறார் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசு பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய்லாந்தில் சிம்பு தனியாக இல்லை, அவருடன் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால் சிம்பு இருக்கும் அதே தனி தீவில் தான் இருந்து வருவதாக தகவல் வெளியாகினது. அந்த வகையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் தாய்லாந்தில் உள்ள தனி தீவில் செம்ம ஜாலியாக இருந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

தாய்லாந்தில் இருந்து திரும்பிய சிம்பு, நடிங்கர் கமல்ஹாசன் தயாரிக்கும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது, இதில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியானது , ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், தீபிகா படுகோனிடம் யாரும் சிம்பு உடன் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை கூட நடத்த வில்லை என்பது பின்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது லண்டனில் இருக்கும் சிம்பு தான் அடுத்து நடிக்க இருக்கும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க வேண்டும் என தன்னுடைய ரகசிய காதலிக்கு சிம்பு சிபாரிசு செய்து வருவதாகவும், மேலும் தமிழில் பட வாய்ப்புகள் வந்தாலும் நிதி அகர்வால் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருவதற்கு பின்னணி காரணம் சிம்பு தான் என கூறப்படுகிறது.

அதாவது இதற்கு முன்பு சிம்பு காதல் தோல்விகளை சந்திக்க காரணம், சினிமா துறையில் உள்ள சிலர் சிம்பு காதலித்த நடிகையிடம், அய்யோ.. சிம்பு படும் மோசம் என சிம்புவை பற்றி போட்டு விட்டது தான் என்கிற ஒரு பேச்சும் உண்டு, அந்த வகையில் நிதி அகர்வால் மற்ற படங்களில் கமிட்டானால், அந்த படத்தில் நடிக்கும் ஆர்ட்டிஸ்கள், தன்னை பற்றி தவறாக போட்டு விட்டு இந்த காதலும் புட்டுக்கிட்டு போய் விட கூடாது என்கிற அச்சத்தில், படத்தில் கமிட்டாக விடாமல் தனது அருகிலே நிதி அகர்வாலை சிம்பு பாதுகாத்து வருகிறாராம்.

இந்நிலையி தனக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிப்பதன் மூலம், படத்திலும் நடித்தது போன்று ஆகி விடும், அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய காதலையும் வளர்த்தது போன்றாகி விடும் என்பதால், தற்பொழுது கமல்ஹாசன் தயாரிக்க இருக்கும் படத்தின் தனக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க வைக்க வேண்டும் என பட குழுவினரிடம் நச்சரித்து வருகிறார் சிம்பு என்கிறது சினிமா வட்டாரங்கள்.