எதிப்புக்கு உள்ளான ஜவான் திரைப்படம்… போட்ட காசை எடுப்பாரா ஷாருகான்.?

0
Follow on Google News

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து படம் இன்று வெளியானது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிரடி ஆக்ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, காதல் காட்சி என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டம் தான் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இப்போ தான் ஜவான் படத்தை பார்த்து முடித்தேன், ஷாருக்கான் ஏகப்பட்ட கெட்டப்புகளில் தனது மொத்த நடிப்பையும் இந்த ஒரு படத்தில் இறக்கி நடித்து அசத்தி உள்ளார். இன்கிரெடிபிளான அவரது நடிப்பை பார்த்து விட்டு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என மற்றொரு ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் பாலிவுட்டின் பாய்காட் கேங் #BoycottJawanMovie ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், உதயநிதி ஸ்டாலின் தான். சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி “ஸ்டாலின் கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன.

பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம்.” என்று பேசிவிட்டுச் சென்றார். இதற்கு பாஜக முதல் பல இந்துத்துவ அமைப்புகள், குறிப்பாக வட இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வழக்கம் போல் ஷாருக்கானின் பிரமாண்ட படமான ஜவானின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இதை அறிந்ததும் அப்படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பாய்காட் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் நடிகர் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த வீடியோவை ஷேர் செய்து நெட்டிசன்கள் எங்கள் கோயில் ஒன்றும் நீங்கள் புரோமோஷன் செய்ய ஜிக்கிக்ஸ் ஸ்டுடியோ இல்லை என பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பதான் படத்தில் தீபிகா படுகோன் காவி நிற உள்ளாடையை அணிந்திருந்தார் என சர்ச்சையை கிளப்ப அந்த படம் அதிரிபுதிரியாக 1000 கோடி வசூலை ஈட்டியது. அதே போல இப்பவும் நல்லா படத்திற்கு நெகட்டிவ் புரமோஷனை செய்யுங்க என ஷாருக்கான் ரசிகர்கள் இந்த பாய்காட் டிரெண்டிங்கை ஆதரித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர்.