தீபாவளி, பொங்கல், ரஜினிகாந்த் பிறந்தநாள் வந்துவிட்டால் போதும் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு அதிகாலை முதல் இருந்தே அவருடைய ரசிகர்கள் குவிய தொடக்கி விடுவார்கள், இதில் பெரும்பாலும் வயதான ரசிகர்கள் தான். அதாவது ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்து நாங்கள் அவருக்கு ரசிகராக இருக்கிறோம் என பெருமையாக பேசும் அவரது ரசிகர்கள்.
நான் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என 1996ஆம் ஆண்டு முதல் மக்களையும் ஏமாற்றி, அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றி படத்தில் அரசியல் பஞ் வசனம் பேசி தன்னுடைய படத்தை வெற்றி அடைய செய்து வந்த ராஜினி. இனி அரசியலுக்கு வரமாட்டார்ப்பா என அவருடைய ரசிகர்கள் வயதான காலத்திலாவது பொழப்பை பார்ப்போம் என அவரவர் பொழப்பை பார்த்து கொண்டிருந்த போது.
தீடிரென கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், நான் அரசியலுக்கு வருவது உறுதி, என்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல், வரும் 2021 சட்டசபை தேர்தலில் அணைத்து தொகுதியிலும் போட்டியிடுவேன் என பொழப்பை பார்த்து கொண்டிருந்த அவருடைய வயதான ரசிகர்களை தூண்டிவிட்டு விட்டு, அடுத்தடுத்து படத்தில் நடிப்பதில் பிசியாக இருந்த ரஜினிகாந்த், அவருடைய சினிமா படங்கள் மட்டுமே வந்தது தவிர, அவர் அரசியலுக்கு வரவில்லை.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கொரோனவை காரணம் காட்டி, நான் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்து, தன்னனுடைய ரசிகர்களுக்கு ஆல்வா கொடுத்தார் ரஜினிகாந்த், குறிப்பாக ரஜினியின் வயதான ரசிகர்கள் இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். சும்மா அவரவர் பொழப்பை பார்த்து கொண்டிருந்த வயதான ரஜினியின் ரசிகர்கள் பலரை நான் அரசியலுக்கு வருகிறேன் என உசுப்பேத்திவிட்டு ஏமாற்றி விட்டு மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார் ரஜினி.
இருந்தும் அவருடைய ரசிகர்கள் திருந்துவதாக இல்லை, ஒவ்வொரு பண்டிகையின் போது அவர் வீட்டின் முன்பு வந்து தலைவா, இறைவா என்று உயிரை கொடுத்து கத்துகிறார்கள், ரஜினியும் அவர் வீட்டின் உள்ளே இருந்து அவர் வீட்டு சுவரை எட்டி பார்த்து கையசைக்கிறார், ரசிகர்களும் என்னமோ கடவுள் தரிசனம் கிடைத்தது போன்று மகிழ்ச்சியில் இது போதும் தலைவா எங்களுக்கு என்று திரும்பி செல்கிறார்கள்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கம் போல் ரஜினி வீட்டின் புன்பு திரண்ட அவரது ரசிகர்கள் தலைவா, இறைவா வெளியில் வந்து எங்களை பார் என கூச்சலிட்டனர். இதனால் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளார்கள், இதில் கோபமடைந்த ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பாட்டி ஒருவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் வீட்டு பாதுகாவலர்களை கோபத்தில் திட்ட ஆரம்பித்து விட்டார்.
‘தலைவா, இறைவானு வருவாங்க.. எங்கள மாதிரி ஒருத்தரும் இங்க கஷ்டப்பட மாட்டாங்க.. பாக்க வரவங்களுக்கு கேட்ட திறந்து உள்ள விடுங்க.. ரஜினிகாந்த் வீட்டு கேட் திறக்க மாட்டீங்க.. எங்க வாசல மூடி இப்படி வைக்கணும். என்ன நான்சென்ஸ் இது? உங்க வாசல திறந்து எல்லாரையும் உள்ள விடுங்க.. தலைவர் வீட்ட பார்க்கட்டும். நாங்களும் டேக்ஸ் கட்டறோம்.. ஆனா எங்களுக்கு ஒரு அட்வாண்டேஜூம் இல்ல.
போதாத குறைக்கு பண்டிகை அன்று விடியற்காலைல இந்த மாதிரி கூட்டம் வந்து இப்படி பண்றீங்க. சாமி கும்பிடமுடியாது, ஒன்னும் பண்ண முடியாது. நாங்க சலிப்படைந்து விட்டோம்’ என ரஜினி பக்கத்து வீட்டு பட்டி திட்டிய வீடியோவை பார்த்து பலரும், அந்த பட்டி கோபத்தில் நியாயம் உள்ளது, ரஜினி அவரை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வீட்டின் கேட்டை திருந்து உள்ளே விட வேண்டியது தான ரசிகர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.