இளையராஜா முகதிரையை கிழித்த ரஜினி… அவமானத்தில் பியூஸ் போன பல்பாக மாறிய இளையராஜா முகம்..

0
Follow on Google News

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்தில் ஜிப்ரான் இசையில் வெளியான சரசர சார காத்து வீசும் போது பாடல் மிக பெரிய ஹிட் அடித்து பல விருதுகளை அந்த பாடல் ஆசிரியர் வைரமுத்துக்கு பெற்று தந்தது, இந்த பாடலுக்காக விருது வாங்கும் மேடைகளில் இந்த பாடல் உருவாகிய விதம் எப்படி என்பது பற்றி வைரமுத்து பேசி பெருமை அடைந்து வந்த அதே நேரத்தில், சரசர சார காத்து வீசும் போது பாடல் எனக்கு சொந்தமானது என பாடலாசிரியர் கார்த்திக் நேதா பரபரப்பை ஏற்படுத்தினார்.

வாகை சூட வா படத்தில் இரண்டு பாடல்களை பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுதியுள்ளார், அதில் “போறானே ..போறானே என்கிற பாடல் மட்டும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா பெயரிடப்பட்டு அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் சரசர சார காத்து பாடலையும் கார்த்திக் நேதா எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி வைரமுத்து அவர் பெயரை போட்டு கொண்டதாக வெளியான தகவல் வைரமுத்துவுக்கு மிக பெரிய அவ பெயரை ஏற்படுத்தி தந்தது.

கார்த்திக் நேதா போன்று பல திறமையாளர்கள் கற்பனைகள் திருடப்படும் சினிமா துறையில், சரசர சார காத்து பாடல் திருட்டு சர்ச்சையில் வைரமுத்து சிக்கியது போன்று இளையராஜா சிக்கியுள்ள சம்பவம் ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி, உங்களுடைய வள்ளி படத்தில் அருமையாக இசை அமைத்திருப்பார். என ரஜினி, இளையராஜா இருவரையும் மேடையில் வைத்து பாராட்டுகிறார் சுஹாசினி.

அப்போது இளையராஜா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிவது போன்று பிரகாசமான முகத்துடன் ஆமாம், ஆமாம் என்று இளையராஜா தலையை ஆட்ட, உடனே குறுக்கிட்ட ரஜினிகாந்த் இல்லை, வள்ளி படம் இளையராஜா பண்ண வில்லை, கார்த்திக் ராஜா பண்ணின படம், ஆனால் இளையராஜா தான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ண வேண்டும் என அவரை சந்தித்தேன், ஆனால் அவர் கார்த்திக் மியூசிக் பண்ணினால் பரவாயில்லையா என்று இளையராஜா கேட்டார்.

அதற்கு நீங்க சொன்னா சரி தான் என்றேன், அதன் பின்பு வள்ளி படத்திற்கு கார்த்திக் ராஜா தான் மியூசிக் பண்ணினார் என ரஜினி பேசியதும், ஆயிரம் வாட்ஸ் பல்பு போன்று பிரகாசமாக இருந்த இளையராஜா முகம் பியூஸ் போன பல்பு போன்று உடனே வாடியது. ஆனால் ரஜினிகாந்த் இளையராஜாவை பார்த்து சிரிக்க உடனே பதிலுக்கு ஒரு நகட்டு சிரிப்பு சிரித்து மழுப்பினார் இளையராஜா.

ரஜினிகாந்த் உண்மையை பேசி இளையராஜாவின் தில்லாலங்கடியை போட்டுடைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், வள்ளி படத்தில் கார்த்திக் ராஜா இசை அமைத்து, எப்படி அந்த படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா என பெயரிடப்பட்டு இளையராஜாவுக்கு அங்கீகாரம் கிடைத்தது போன்று, உழைப்பாளி, பாண்டியன் போன்ற பல படங்களுக்கு ரீ-ரெக்கார்டிங் பண்ணினது கார்த்திக் ராஜா தான் என்று கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜாவை விட மிக உயரத்துக்கு செல்ல வேண்டியவர் கார்த்திக் ராஜா, ஆனால் அவர் தந்தை அருகிலே இருந்து பயணம் செய்ததால், இன்று வெறும் கச்சேரி ஆர்கனைஸ் பண்ணிட்டு இருக்கிறார் கார்த்திக் ராஜா. இதே போற்று இளையராஜா இசையில் வெளியான சில பாடல்கள் கங்கை அமரனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் நிலையில், இப்படி தம்பி, மகன் கற்பனையில் உருவாக்கியதை இளையராஜா தனது பெயரை போட்டு கொண்டார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.