தமிழனுக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட அவமானம்…. ரஜினிகாந்துக்கு எதிராக கொந்தளிக்கும் முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ள இந்த படத்தின் கன்னட பட புரோமேஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது , இதில் கலந்து கொண்டு சித்தார்த் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அங்கே உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதை சற்றும் எதிர்ப்பாராத சித்தார்த் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து இருந்தார். மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தார் சித்தார்த், ஆனாலும் கூட கன்னட அமைப்பினர் அங்கிருந்து வெளியேறுவதாக இல்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்ப நடிகர் சித்தார்த் பாதியிலேயே மேடையில் இருந்து கிளம்பினார். இதனால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தார்த்துக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் கண்டனம் தெரிவித்து வரக்கூடிய நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார், இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில், ‘பல வருடங்களாக காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத அரசியல் கட்சிகளையும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேள்வி கேட்காமல்,

சாமானிய மக்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடிகனாக, கன்னடிகர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்! மன்னித்துவிடுங்கள் சித்தார்த்’ என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்த வன்னியரசு இந்த விவகாரத்தில் ரஜினியை உள்ளே இழுத்துவிட்டுள்ளார்.

“காவிரி பிரச்சனையை வைத்துக்கொண்டு நடிகர் சித்தார்த்தின் ஊடகவியலாளர் சந்திப்பை ரகளை செய்து நிறுத்தியுள்ளது கன்னட இனவெறி அமைப்பு. இப்போக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டுமே துணிச்சலுடன் கண்டித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு திரைத்துறையினர் இதுவரை கண்டிக்க முன் வரவில்லை. என தெரிவித்துள்ள வன்னியரசு.

குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காக்கிறார். உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களா? அல்லது பிரகாஷ்ராஜ் அவர்களா?” என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் பிரபல சினிமா தயாரிப்பாளர் AM சௌத்திரி தேவர்,கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது முதல் ஆளாக குரல் கொடுத்த ரஜினி நடிகர் சித்தார்த் அவர்களை கன்னட வெறியர்கள் தமிழன் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சியில் வெளியேற்றி அவமானப்படுத்திய போது என் குரல் கொடுக்கவில்லை என சௌத்ரி தேவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு முறை கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த சந்தன கடத்தல் வீரப்பன் போன்ற ஒருவனை நான் பார்த்ததே இல்லை. அவன் ஒரு ராட்சசன். அவனை எல்லாம் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்” என கொந்தளித்து பேசினார் புனித்ராஜ்குமாரின் தந்தையையும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜ்குமாரை விரப்பன் கடத்திய போது அவரை மீட்க ரஜினி தீவிரமாக அப்போது முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கர்நாடக நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது எதிர்ப்பு தெரிவித்த ரஜினிகாந்த், தமிழ் நடிகர் சித்தார்த்துக்கு கர்நாடகாவில் நடத்த இந்த சம்பத்துக்கு என மௌனம் காத்து வருகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் மௌனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.