சசிகலாவை சீண்டும் ரஜினிகாந்த்… ஜெயிலர் படத்தின் கதை லீக் அவுட்.. 

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்து வருகிறார். இந்த படத்தில் சசிகலாவே சீண்டுவது போன்று சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிப்பில் பாட்ஷா படம் வெளியான காலங்களில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா – ரஜினி இருவருக்குமான மோதல் உச்ச கட்டத்தை இருந்தது.

அதன் பின்பு தொடர்ந்து ரஜினி நடிக்கும் பல படங்களில் ஜெயலலிதாவை சீண்டுவது போன்று அரசியல் பஞ்ச் வசனம் இடம் பெறும். ஜெயலலிதா – ரஜினி இருவரும் சமரசம் ஏற்பட்டனர், மேலும் ரஜினி அனைத்து அரசியல் கட்சி தலைவருக்கும் பொதுவானவராக இருந்தார், இதனால் சமீப காலமாக ரஜினி நடிக்கும் படங்களில் அரசியல் பஞ்ச் இடம்பெறுவதில்லை.

தற்பொழுது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்து நடித்து வருவதால் அந்தப் படத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு முக்கிய விஐபி வெளியில் சென்று ஷாப்பிங் செய்து வருவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த பொழுது,

அவரும் அவர் உடன் சிறையில் இருந்த இளவரசியும்  அங்கே இருந்த சிறைத்துறை அதிகாரிகள் துணையுடன் ஜெயிலிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு மீண்டும் திரும்பிய சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மையப்படுத்தி இந்த படத்தில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.