தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை கவிதா.1976-1980 களில் புகழ்பெற்ற சினிமா நடிகை. இவரது பூர்வீகம் ஆந்திரா. ஆறு வயதில் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளார். தனது 11 வயதில் ‘ஓ மஞ்சு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகனார் கவிதா. இந்த படம் 1976ல் வெளியானது. தொடர்ந்து ஆட்டுக்கார அலமேலு, ரவுடி ராக்கம்மா, காலமடி காலம், அவள் தந்த உறவு, ஆளுக்கொரு ஆசை என தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இரண்டு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்குப் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாண்டவர் பூமி படத்தில் நடித்தார்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கடைசியாக நாரதன் என்ற தமிழ் படத்தில் நடித்தார். 1976 முதல் 1984 வரை முன்னணி கதாநாயகியாக திரைத்துறையில் வலம் வந்தவர்.
1991 முதல் தற்போது வரை பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அரசியலில் ஈடுபாடு அதிகம். படங்களில் நடிப்பதை குறைத்தவர் இவர் அதிரடியாக ஆந்திர அரசியலில் நுழைந்தார். 2008ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடு ஜெயித்ததும் தனக்கு முக்கியத்துவம் தராததால் கட்சியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ஆக்டிவா வொர்க் பண்ணியுள்ளார்.
சினிமா, அரசியல் என பிசியாக இருந்தவர் 2014ல் சின்னத்திரை பக்கம் வந்தார்.முதன் முதலில் ஜீ தெலுங்கில் மூக மனசுலு என்ற சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து 2018ல் சன்டிவியின் கங்கா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து நந்தினி தொடரில் நடித்தார். நந்தினி சீசன் 2 கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இவரே நடித்தார்.
மூத்த நடிகையான நடிகை கவிதா அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில், ஓ மஞ்சு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது நடிக்க போகமாட்டேன் என்று தரையில் உருண்டு புரண்டு அழுதேன். சரி படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஸ்கூலுக்கு போகலாம் என்று நினைத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்ததால் என் படிப்பு அப்படியே நின்று விட்டது..
ரஜினியுடன் பல படத்தில் சேர்ந்து நடித்ததால், ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டது என்று ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அப்போது நான் மோகன் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். மேக்கப் மேன் தான் அந்த பத்திரிக்கையை எங்களிடம் காட்டினார். அப்போது நான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால், மோகன் பாபு மிகவும் வருத்தப்பட்டார்.
அப்போது நாங்கள் அனைவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கே நேராக சென்று, பொய்யான செய்தியை ஏன் போடுறீங்க என்று சண்டை போட்டோம் அப்போது அந்த பத்திரிக்கை தவறை ஏற்றுக்கொண்டு மறுப்பு போடுவதாக சொன்னார்கள். அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீ போல எங்கள் வீடு வரை சென்று, வீட்டில் இருந்து போன் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவிய நேரத்தில் எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். அனைவருமே தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்படித்தான் என்னுடைய கணவரும் மருந்து மாத்திரைகளை எடுத்தார். ஆனால் சிகிச்சை பலன் கொடுக்கவில்லை. கூடவே என்னுடைய மகனும் உயிரிழந்து விட்டான். இந்த உலகத்தில் எது இல்லை என்றாலும் நான் இருந்து விடுவேன். ஆனால் அவர் இல்லாமல் என்னால் வாழவே முடியவில்லை என்று நடிகை கவிதா கதறி அழுதார்.