எத்தனை கோடி கொடுத்தாலும் ரஜினியுடன் நடிக்க மாட்டேன்… என் வயசு என்ன.?ஒரு வயசு என்ன.?

0
Follow on Google News

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

அந்த படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார்.

இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.

ரஜினிகாந்த்துடன் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்த நடிகை குறித்து தெரியவந்திருக்கிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை வைஜெயந்தி மாலா. இந்தி படங்களில், தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, தமிழிலும் தனது வெற்றிக்கொடியை தக்க வைத்துக் கொண்டார் வைஜெயந்திமாலா.

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1960ஆம் ஆண்டு, யோகநாத் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. வேதாவின் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும், ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு பக்கபலம். திரையுலகில் பல எல்லைகளைக் கடந்து கொடி நாட்டிய வைஜெயந்திமாலா அரசியல் அரங்கையும் தொட்டுப் பார்த்தார். ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த அவருக்கு ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு இல்லை. அந்தச் சமயத்தில் ரஜினிகாந்த் மாப்பிள்ளை படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் இன்றளவும் பிரபலம். ரஜினியின் மாப்பிள்ளை படத்தை தனுஷ், ஹன்சிகா, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோரை வைத்து பின்னர் ரீமேக் செய்தார்கள். மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினை விட வெயிட்டான கதாபாத்திரம் மாமியார் தான். ரஜினியின் மாமியாராக, இல்லை இல்லை திமிர் பிடித்த மாமியாராக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா. ரஜினிக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும்.

பணக்கார மாமியாரான ஸ்ரீவித்யா தன் ஏழை மருமகனான ரஜினி எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என சதி செய்வார். அந்த மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு முதலில் வைஜெயந்திமாலாவிடம் தான் கேட்டிருக்கிறார்கள். கதைப்படி மாமியார் கதாபாத்திரம் ரஜினியுடன் சண்டை போட வேண்டும், திட்டிக் கொண்டே இருக்க வேண்டும். என்னால் ரஜினியை திட்ட முடியாது. அத்தகைய கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் வைஜெயந்திமாலா. அதன் பிறகே ஸ்ரீவித்யாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ரஜினி மீதான மரியாதையால் படத்தில் நடிப்புக்காக கூட திட்ட மாட்டேன் என கூறியிருக்கிறார் வைஜெயந்திமாலா.