தென்னிந்திய சினிமாக்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடிக்கும் நடிகர்களை விட தமிழில் நடிக்கும் நடிகர்கள் தான் பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள. அதிலும் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ, அதன் அடிப்படையிலேயே முன்னணி நடிகர்கள் வரிசை பட்டியலிட படுவதால், போட்டி போட்டு ஒவ்வொரு படத்திற்கும் அவர்களுடைய சம்பளத்தை அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, விஜய் ,அஜித் கமல் போன்ற டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி இரண்டாம் கட்ட நடிகர்களும் கூட ஒவ்வொரு படத்திற்கும் தங்களுடைய சம்பளத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு சுமார் 100 கோடியை கடந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோடி கோடியாக வாங்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் அள்ளிக் கொடுக்க வேண்டாம், மக்களுக்கு கிளியாவது கொடுத்தாலே தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும், இந்நிலையில் தமிழ் சினிமாவில் கோடிகளை வாங்கி கமுக்கமாக பதுக்கும் நடிகர்கள் மத்தியில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா செயல் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுக்கு சவுக்கடியாக அமைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான குஷி என்கின்ற படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் தனக்கு கிடைத்த சம்பளத்தில் சுமார் ஒரு கோடி ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் விதம் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்காக வறுமையில் இருக்கும் நூறு குடும்பங்களை தேர்ந்தெடுத்து தல ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க இருக்கும் இந்த செயல், பலருக்கு ஐயோ வெறும் ஒரு லட்சம் தானே என்று நினைக்கலாம், ஆனால் ரோட்டோரத்தில் பூக்கடை வவைத்திருப்பவர்களுக்கு, செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கும், சலவை செய்யும் தொழிலாளிகளின் குடும்பங்கள் வாழ்க்கையை மற்றும் என்பதை மறுக்க முடியாது.
அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்களை ஒப்பிடும்போது தெலுங்கு சினிமா நடிகர்கள் மிகக் குறைந்த சம்பளமே வாங்கி இருந்தாலும் கூட அவர்களின் தாராள மனது எத்தனையோ குடும்பங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவைச் சார்ந்த முன்னணி நடிகர்கள் தங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறிய தொகையை ஒவ்வொரு படத்தின் போது பல ஏழை குடும்பங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு முன்வந்து இருந்தால் இன்று தமிழகத்தில் பல குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டு செழிப்பாக ஒரு மாற்றத்தை கண்டு இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்த ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், அந்த படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார்.
ஏற்கனவே பல கோடிகளில் புரண்டு வருகின்றவர்களுக்கு மேலும் அவர்களிடம் விலை உயர்ந்த கார் இருக்கும் போது, ரஜினி, லோகேஷ், அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக தயாரிப்பாளர் அளிப்பதற்கு பதிலாக அந்தப் பணத்தில் எண்ணற்ற ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்திருந்தால் அந்த குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்திருக்கும், இருந்தாலும், என்ன தான் கோடி கோடியாக சம்பாரிச்சாலும் அதற்கெல்லாம் மனசு வேண்டும் என்கிற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடதக்கது.