ஜவான் வெளியாகவே இல்லை… அதுக்குள்ள அட்லீயை வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்…

0
Follow on Google News

கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தை படுமோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் அந்தப் படத்தின் வசூல் குறித்தும் “வடை சுடுகிறார்கள்” என்று ட்விட்டரில் அடிக்கடி கேலி செய்து வந்தார். இப்படி புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை கடுமையான விமர்சனங்களால் வறுத்தெடுப்பது ஒன்றும் அவருக்கு புதிதல்ல.

இவ்வாறு எப்போதும் தியேட்டர்களில் வெளியான படங்களுக்கு மட்டுமே ரிவியூ கொடுத்து வந்த ப்ளூ சட்டை மாறன், இப்போது இன்னும் ரிலீஸ் ஆகாத படங்களையெல்லாம் ரோஸ்ட் செய்யத் தொடங்கிவிட்டார். அப்படி மாறனின் கையில் மாட்டியிருக்கும் படம்தான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் “ஜவான்” திரைப்படம்.

இப்படத்தில் இயக்குனர் அட்லீ நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தீபிகா படுகோனே, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களைக் களமிறக்கியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனால் ‘ஜவான்’ படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஷாருக்கானின் மனைவி கௌரி கான்தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இவ்வாறு இந்தியா சினிமாவின் மிகப்பெரிய பிரபலங்களைக் களமிறக்கி எடுக்கப்பட்டிருக்கும் ஜவான் படம், எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர்.

இந்நிலையில், ஜவான் படம் நாளை அனைத்துத் திரையரங்குகளிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கான் ஆகியோர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில்தான், ப்ளூ சட்டை மாறன் சினிமா ரசிகர்களை எரிச்சலூட்டும் விதமாக ட்வீட் போட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட அனைத்து படங்களையும் கடும் விமர்சனங்களால் வெளுத்து வாங்கியவர் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில், நாளை வெளியாகவுள்ள ‘ஜவான்’ படம் மட்டும் அவருக்கு விதிவிலக்கா என்ன? அவரது ட்விட்டர் பதிவில் ‘சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?’ , ‘ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன்.

நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?’ என்றும் தற்பொழுது இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி வரும் சனாதானம் சர்ச்சையையும் பற்றி அவரது பதிவில் தொட்டும் தொடாமலும் குறிப்பிட்டிருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து வெளியிட்டுள்ள ட்வீட்டிற்கு வழக்கம்போல சினிமா ரசிகர்களும், அரசியல் பேசுபவர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இப்படி படம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே அலப்பறையை கூட்டும் ப்ளூ சட்டை மாறன், ஜவான் படத்தை பார்த்து விட்டு என்ன என்ன சொல்லப் போகிறாரோ என்று நெட்டிசன்கள் கமென்ட்டில் மானாவாரியாக பேசி வருகின்றனர். எது எப்படியோ? நாளை படம் ரிலீஸ் ஆனாதான் தெரியும்.. காத்திருப்போம்..